ஹோட்டலில் இட்லி தாமதமாக கொடுக்கப்பட்டதால் உரிமையாளர் மீது சாம்பார் வாளியால் தாக்குதல்

 
செட்டிநாடு ஸ்பெஷல் : இராமச்சேரி இட்லி செட்டிநாடு ஸ்பெஷல் : இராமச்சேரி இட்லி

ஹோட்டலில் இட்லி தாமதமாக கொடுக்கப்பட்டதால் ஹோட்டல்  உரிமையாளருக்கு சாம்பார் வாளியால் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்ட ஓட்டல் உரிமையாளர் மீது தாக்குதல்! | nakkheeran


வேலூர் மாவட்டம் காட்பாடி  அடுத்த கரசமங்கலம் பகுதியில் பேருந்து நிறுத்தம் அருகில் அமுதம் ஓட்டல் கடை உள்ளது. இதன் உரிமையாளர் சீனிவாசன் அவருடைய மகன் கிருபானந்தன் நேற்று கடையிலிருந்துள்ளார். அப்போது கடையில் சாப்பிடுவதற்காக கணகசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் மற்றும் அவரது மகன்   ஜெயா சூரியா வந்துள்ளனர். அப்போது அவர்கள் இட்லி கேட்டுள்ளனர். உடனடியாக இட்லி தயாராக இல்லை என்பதால் தயாரானவுடன் கொடுக்கிறோம் என ஹோட்டல் உரிமையாளர் கிருபானந்தன்  கூறியுள்ளனர்

குடிபோதையில் இருந்த சுரேஷ் மற்றும் ஜெயசூர்யா ஆகியோர் ஏன் தாமதமாக இட்லி கொடுக்கிறீர்கள்? என சமையலறைக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் கைகலப்பாக மாறியது, அப்போது ஜெயா சூர்யா  சாம்பார் வாளியால் அடித்ததில் ஹோட்டல் உரிமையாளர் கிருபானந்தன் என்பருக்கு தலை, முகத்தில் காயம் ஏற்பட்டது. வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கிருபானந்தன் அனுமதிக்கப்பட்டுள்ள அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வேலூர் விருதம்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேஷ் மற்றும் அவரது மகன் ஜெய் சூர்யா ஆகிய வரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.