இல்லத்தரசிகள் ஷாக்..! 20 லிட்டர் கேன் விலை திடீர் உயர்வு..!
Mar 21, 2026, 14:07 IST1774082263846
20 லிட்டர் மினரல் வாட்டர் கேன் ரூ.5 வரையிலும் மற்றும் ஒரு லிட்டர் மினரல் வாட்டர் பாட்டில் ரூ.3 வரையிலும் உயர்த்தப்படுகிறது. மூலப் பொருட்களின் விலை உயர்வு, மின்சார கட்டண உயர்வு, வேலையாட்களுக்கான சம்பளம் மற்றும் போக்குவரத்து செலவு உள்ளிட்ட காரணங்களுக்காக இந்த விலை உயர்வு கொண்டு வரப்பட்டுள்ளது.
குடிநீர் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் இலங்கேஸ்வரன் இது குறித்து கூறுகையில், “குடிநீர் தயாரிப்பில் மூலப்பொருட்கள் 40 சதவீதம் வரை விலை உயர்ந்து விட்டன. கடந்த 20 ஆண்டுகளாகவே மின்சார கட்டணமும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. இதுநாள் வரை எங்களது லாபத்தை குறைத்துக் கொண்டு பொதுமக்களுக்கு தண்ணீரை விநியோகித்து வந்தோம். ஆனால் தற்போதைய சூழலில் விலை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை என்றார்.

