எல்லோரும் எப்படி இருக்கீங்க… சாப்பிட்டீங்களா… - தவெக தலைவர் விஜய்

 
1 1

நாகை அண்ணா சிலை பகுதியில் இன்று பரப்புரையை தொடங்கிய தவெக தலைவர் விஜய், எல்லோருக்கு வணக்கம், எல்லோரும் எப்படி இருக்கீங்க… சாப்பிட்டீங்களா… கடல் தாய் மடியில் இருக்கிற நாகப்பட்டினத்தில் நின்று பேசுகிறேன். எனது மனதுக்கு மிகவும் நெருக்கமான ஊர் நாகப்பட்டினம்” என்றார்.


மீன் ஏற்றுமதியில் இரண்டாவது இடத்தில் இருக்கும் நாகையில் நவீன வசதிகள் இல்லை. அடிப்படை வசதிகள் இல்லாத குடிசை பகுதிகள் இங்கு அதிகம் உள்ளன. இலங்கை கடற்படையால் நம் மீனவர்கள் தாக்கப்படுவதும், அதற்கான தீர்வுகளை பற்றி நான் ஏற்கனவே பேசி உள்ளேன். மீனவர்களுடன் இருப்பது என் கடமை. இதே நாகையில் 14 ஆண்டுகளுக்கு முன்னர் மீனவர் தாக்குதலை கண்டித்து ஒரு பொதுக்கூட்டம் நடத்தி உள்ளோம். விஜய் களத்திற்கு வருவது புதிதில்லை. எப்போதோ வந்தாச்சு” என தவெக தலைவர் விஜய் பேசினார்.


தலைவனை இழந்து தவிக்கிற ஈழ தமிழர்களுக்காக நிற்க வேண்டியதும் நம் கடமை. மீனவர்கள் படும் கஷ்டத்தை பார்த்து கடிதம் எழுதி கடந்து போகிற கபட நாடக திமுக அரசு அல்ல நாம். தமிழக மீனவர்களை பிரித்து பேசுவதற்கு நாம் பாசிச பாஜக அல்ல” என தவெக தலைவர் விஜய் பேசினார்.

இறால் பண்ணைகளை முறைப்படுத்த வேண்டும். கடலோர பகுதிகளைப் அலையாத்தி காடுகளை அழிப்பதை தடுக்க வேண்டும். குடிநீர் தேவையை தீர்க்க காவிரி தண்ணீரை கொண்டு வரவில்லை. அரசு கடல்சார் கல்லூரி கொண்டு வந்திருக்கலாம்; செய்யவில்லை. மீன் தொழிற்சாலை, தொழில் வளத்தை பெருக்க எதுவும் செய்யவில்லை. வெளிநாட்டு முதலீடுகளை பற்றி சிரித்துகொண்டே ”பேசும் சி. எம். சார். மனசை தொட்டு சொல்லுங்கள். வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டில் முதலீடா?” என தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பினார்.