எத்தனை முறை அனுப்பினாலும் அதை ஆளுநரால் எப்படி அங்கீகரிக்க முடியும்? விளக்கம் சொல்லும் கிருஷ்ணசாமி

 
க்க்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிகளால் உருவாக்கி நிறைவேற்றப்பட்ட 14 கோப்புகளுக்கு இன்னமும் அனுமதி தராமல் தாமதித்து வைத்துள்ளார் ஆளுநர் . அதிலும் குறிப்பாக 42 உயிர்களை பலி வாங்கிய ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் அவசரச் சட்டத்திற்கு இன்னமும் அனுமதி தராமல் இருக்கிறார்.  ஆனால் ஆன்லைன் சூதாட்டம் நடத்தும் நிறுவனங்களின் உரிமையாளர்களை அவர் வெளிப்படையாக சந்தித்து பொதுவெளியில் பரவி கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளார்.

ர்

 ஆளுநர் ஏன் இது போன்ற கோப்புகளை முடக்கி வைத்துள்ளீர்கள் என்று கேட்டபோது,  அரசுக்கு உரிய எழுத்து மூலம் பதிலை தராத ஆளுநர் , சென்னை ராஜ் பவன் தர்பார் ஹாலில் நடந்த குடிமை பணி தேர்வர்களுடனான கலந்துரையாடலின் போது,  விளக்கம் அளித்துள்ளார்.  கிடப்பிலிருந்தாலே நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம் நீண்ட நாட்கள் கிடப்பில் வைக்கப்பட்டுள்ள மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம்.  வார்த்தை அலங்காரத்துக்காக அதனை நிறுத்தி வைப்பு என்கிறோம் என்று பேசி இருக்கிறார் ஆளுநர்.  இதனால், ஆளுநர் ஆர். என். ரவியின் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கண்டித்து வரும் 12ஆம் தேதி அன்று மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஆளுநர் மாளிகை முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர் .

இதற்கு புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி,  நீட் தேர்வு தடை குறித்த தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்திற்கு முதல் முறை ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை.  அதனால் மீண்டும் ஒரு மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினார்கள் . இரண்டாவது முறை நிராகரிக்காமல் மசோதாவை ஜனாதிபதி மற்றும் உள்துறை அமைச்சருக்கு பரிந்துரை செய்துள்ளார். 

ர்ர்

நீட் தேர்வை பொருத்தமட்டிலும் இந்திய தேசிய மருத்துவக் கழக ஆலோசனையின் பெயரில் உச்ச நீதிமன்றத்தின் அறிவுரையின் அடிப்படையில் நாடாளுமன்றத்தில் இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்ட ஒன்று.  அந்த சட்டம் இந்தியா முழுமைக்கும் அமலில் இருக்கிறது.  அதனால் நீட் தேர்வு குறித்த மத்திய அரசின் சட்டம் அமலில் இருக்கின்ற பொழுது,  அதற்கு எதிரான இன்னொரு சட்டத்தை ஒரு மாநில சட்டமன்றத் தால் நிறைவேற்ற இயலாது என்பது தெரிந்தும், விடாப்பிடியாக தாங்கள் தேர்தல் நேரத்தில் கொடுத்த ஒரு தவறான வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக மக்களை ஏமாற்ற சட்டத்திற்கு புறம்பாக ஒரு மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றி,  எத்தனை முறை அனுப்பினாலும் அதை ஆளுநரால் எப்படி அங்கீகரிக்க முடியும்? ஜனாதிபதியால் எப்படித்தான் அங்கீகரிக்க முடியும்? நீதிமன்றம் தான் எப்படி ஏற்றுக்கொள்ளும்? என்ற அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பி இருக்கிறார் கிருஷ்ணசாமி .

அதேபோன்று ஆன்லைன் ரம்மி தடை செய்யும் சட்டத்தை இற்றும் அதிகாரம் மத்திய அரசுக்கு உட்பட்டது என்பதை குறிப்பிட்டு அதை திருப்பி அனுப்பினார்  ஆளுநர். அதே மசோதாவை ஆளுநர் குறிப்பிட்ட எந்த வித திருத்தத்தையும் மேற்கொள்ளாமல் மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி இருக்கிறார்கள், இரண்டாவது முறை சட்டமன்றத்தில் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டால் ஆளுநர் அதற்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும்.  அதனால் ரம்மி தடைச் சட்டத்திற்கு அங்கீகாரம் அளிக்கவும் வாய்ப்பு உண்டு.  ஒரு வேலை மத்திய அரசின் வரம்பிற்கு உட்பட்டது என்று ஆளுநர் கருதினால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கவும் வாய்ப்பு உண்டு.  இதுவே இன்றைய தமிழக அரசின் மசோதாக்கள் மீதான நிலை என்று எடுத்துச் சொல்கிறார்.