விமானத்தில் தப்பிக்க முயன்ற கொள்ளையர்களை பிடித்தது எப்படி? என்கவுன்டர் செய்யப்பட்டது ஏன்? காவல் ஆணையர் விளக்கம்..!

 
1

சென்னையில் என்கவுன்டர் செய்யப்பட்டது ஏன் என்பது குறித்து  சென்னை காவல் ஆணையர் அருண் விளக்கமளித்துள்ளார். 

அதில், குற்றச் செயலுக்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்ய கைதானவர்களை  தரமணி ரயில் நிலையம் அருகே அழைத்துச் சென்றோம். அப்போது அங்கே அவர்கள் பதுக்கி வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து காவல்துறையினர் மீது ஜாபர் 2 ரவுன்ட் சுட்டனர். ஆனால் இதில் யாருக்கும்  காயம் ஏற்படவில்லை. போலீஸ் வாகனத்தின் மீது குண்டுகள் பாய்ந்தது. தற்காப்புக்காக, காவல்துறையினர் சுட்டதில் குலாம் உயிரிழந்தார் என்று தெரிவித்தார்.

குற்றத்துக்குப் பயன்படுத்தியிருப்பது கர்நாடக பதிவு எண் கொண்ட இருசக்கர வாகனத்தில் சென்றிருப்பது தெரிய வந்துள்ளது. சென்னையில் நேற்று குற்றவாளிகளால் பறிக்கப்பட்ட 26 சவரன் மதிப்புள்ள ஆறு செயின்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விமானத்துக்கு உள்ளிருந்துதான் இருவரும் கைது செய்யப்பட்டனர். கைதான இருவரும் தனித்தனியே விமானத்தில் சென்னை வந்து ஒன்றாக கொள்ளையடித்துவிட்டு மீண்டும் தனித்தனியாக விமானத்தில் தப்புவது வழக்கம். 100க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தே வழிப்பறி கொள்ளையர்களை நெருங்கினோம் என்றார். 

கைதான 3 பேரில் ஒருவர் முன்கூட்டியே சென்னை வந்து அனைத்து பகுதிகளையும் நோட்டமிட்டு தேவையான ஏற்பாடுகளை செய்து விடுவார். நேற்று காலை 4.15 விமானத்தில் சென்னை வந்து இறங்கியிருக்கிறார்கள். உடனே இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு 6 மணிக்கெல்லாம் குற்றத்தில் ஈடுபடத் தொடங்கி, மீண்டும் காலை 10 மணிக்கெல்லாம் விமானத்தில் ஏறிவிட்டார்கள். காவல்துறையினர் எச்சரிக்கை கொடுக்கப்பட்டு ஆங்காங்கே சோதனையில் ஈடுபடத் தொடங்கியதைத் தொடர்ந்துதான், மிக விரைவாக குற்றத்தை முடித்துக்கொண்டு அவர்கள் சென்னையை விட்டுப் புறப்பட்டுள்ளனர். 

குற்றத்தில் ஈடுபட்டுவிட்டு, உடைகளை மட்டும் மாற்றிக்கொண்டார்கள். ஷுவை மாற்றவில்லை அதை வைத்து எளிதாக அவர்களை அடையாளம் காண முடிந்ததாகவும் தெரிவித்தார். கடந்த வருடம் 34 செயின் பறிப்பு நடந்துள்ளது. அதில் 33 வழக்குகளைக் கண்டுபிடித்துவிட்டோம். தனிப்படை காவல்துறையினர் ஈரானிய கொள்ளையர்களைத் பிடிக்க மாகாஷ்டிரா செல்ல உள்ளதாக சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.