#LokSabhaElections2024 தமிழகத்தில் 100 வயதை கடந்த வாக்காளர்கள் எத்தனை பேர்?

 
tn

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி நெருங்கி வருவதால், அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.  

election

எந்த தேர்தலாக இருந்தாலும் வயதானவர்கள் வாக்கு சாவடிக்கு வந்து ஓட்டு போடுவது என்பது மிகவும் சிரமமான ஒன்றாக உள்ளது.  நடக்க முடியாதவர்களை தூக்கிக் கொண்டு வந்து வாக்கு சாவடிக்கு சென்று ஓட்டு போட வைக்கும் நிலையே பல ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வருகிறது.

tn

 இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 85 வயதை கடந்த முதியவர்கள்,  மாற்றுத்திறனாளிகள் ஆகியோரும் தபால் ஓட்டு போட வழிவகை செய்யப்பட்டுள்ளது.  கடந்த மாதம் 20ம் தேதி முதல் 25ஆம் தேதி வரை வீடு வீடாக சென்று தபால் ஓட்டு போட 12 டி படிவம் வழங்கப்பட்டது.  தமிழகம் முழுவதும் சுமார் 7 லட்சம் பேர் தபால் ஓட்டு போடுவதற்காக 12 டி படிவத்தை பெற்றுள்ளனர்.  தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகள் 4 லட்சத்து  33 ஆயிரம் பேரும்,  85 வயதை கடந்தவர்கள் 14 லட்சத்து 66 ஆயிரம் பேரும் , 100 வயது கடந்தவர்கள் 8765 பேரும் இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது . முன்னதாக தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மட்டுமே தபால் ஓட்டு போடும் நிலை இருந்தது குறிப்பிடத்தக்கது.