தமிழ்நாட்டிற்கு திறந்துவிட்ட காவிரி நீரின் அளவு எவ்வளவு? வைகோ கேள்வி

 
tn

கடந்த ஆறு மாதங்களில் கர்நாடகா மாநிலம் தமிழ்நாட்டிற்கு திறந்துவிட்ட காவிரி நீரின் அளவு எவ்வளவு? என்று வைகோ கேள்விக்கு ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் பதிலளித்துள்ளார்.

vaiko ttn

கர்நாடக மாநிலம் கடந்த ஆறு மாதங்களில் தமிழ்நாட்டிற்கு திறந்துவிட்ட காவிரி நீரின் அளவுஎவ்வளவு? என வைகோ எம்.பி. அவர்கள் மாநிலங்கள் அவையில் எழுப்பிய கேள்விக்கு 24.07.2023 அன்று இந்திய ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் பிஷ்வே°வர் துடு அவர்கள் அளித்த பதில் வருமாறு:-
கேள்வி எண். 426
(அ) உச்சநீதிமன்ற உத்தரவின்படி கடந்த ஆறு மாதங்களில் கர்நாடகா மாநிலம் தமிழ்நாட்டிற்கு
திறந்துவிட்ட நீரின் அளவு, மாதம் வாரியாக எவ்வளவு?
(ஆ) ஒப்பந்தத்தின்படி முழு டிஎம்சி தண்ணீரைத் திறந்துவிடுமாறு கர்நாடக அரசை
வலியுறுத்துவதற்காக தமிழ்நாடு அரசிடமிருந்து இந்திய ஒன்றிய அரசுக்கு கோரிக்கைகள் ஏதுவும்
வந்துள்ளனவா?

vaiko ttn
(இ) வந்திருந்தால், அமைச்சகம் தெரிவித்த பதில் என்ன?
(ஈ) முந்தைய மாதங்களில், தமிழக டெல்டா பகுதி பாசனத் தேவைக்காக உரிய நேரத்தில் தண்ணீர்
திறந்துவிடவதற்காக ஏதேனும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா?

இந்திய ஒன்றிய நீர்வளத்துறை இணை அமைச்சர் பிஷ்வே°வர் துடு பதில்:
(அ) 16.02.2018 தேதியிட்ட உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி, கர்நாடகா மாநிலம் தமிழகத்துடன் மாநிலங்களுக்கு இடையேயான எல்லையில், அதாவது பில்லிகுண்டுலுவில் 177.25 டிஎம்சி தண்ணீரை ஒரு சாதாரண ஆண்டில் விடுவிக்க வேண்டும். கடந்த ஆறு மாதங்களில் பில்லிகுண்டுலுவிலிருந்து காவிரி ஆற்றில் திறந்துவிட நீரின் அளவு வருமாறு:

மாதங்கள் வழங்க வேண்டிய நீர் வழங்கிய நீர்
ஜனவரி 2023 2.76 7.375
பிப்ரவரி 202 2.50 4.512
மார்ச் 2023 2.50 4.305
ஏப்ரல் 2023 2.50 2.992
மே 2023 2.50 8.467
ஜூன் 2023 9.19 2.833
ஜூலை 2023 31.24 1.071
(18.07.2023 நிலவரப்படி)

vaiko

(ஆ) தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் - நீர்வளத்துறையின் செயலாளரிடமிருந்தும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் (CWMA) தலைவரிடமிருந்தும், ஜூலை மாதத்தில் நிர்ணயிக்கப்பட்ட தண்ணீரை 10 நாள்களில் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறும், அதேபோன்று ஜூன் மாதத்தில் ஏற்பட்டுள்ள நீர் பற்றாக்குறையை உடனடியாகச் சரி செய்யுமாறும் 03.07.2023 அன்று கடிதம் பெறப்பட்டது. 03.07.2023 தேதியிட்ட
மற்றொரு கடிதம் தமிழ்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சரிடமிருந்தும் பெறப்பட்டது.


(இ) மற்றும் (ஈ) காவிரி மேலாண்மை வாரிய இறுதித் தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்றத்தால் மாற்றி அமைக்கப்பட்ட தீர்ப்பின்படி, நடப்பு 2023-24 ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட நீரை பில்லிகுண்டுலுவிலிருந்து சரியான நேரத்தில் வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க 04.07.2023 தேதியிட்ட கடிதத்தின் மூலம் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசைக் கேட்டுக்கொண்டது.

ஜூலை 14, 2023 அன்று நடைபெற்ற காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் (CWRC) 82வது கூட்டத்திலும் இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டது. 01.06.2023 முதல் 12.07.2023 வரை பில்லிகுண்டுலுவில் ஒட்டுமொத்த நீர் இருப்பு 3.379 டி.எம்.சி. மட்டுமே என்று இக்குழு தெரிவித்தது. வரும் மாதங்களில் பில்லுகுண்டுலுவில் இருந்து தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரின் அளவை முறையாக வழங்கிட வேண்டும் என்று கர்நாடக அரசை இக்குழு கேட்டுக்கொண்டது.