சென்னையில் எந்தந்த பகுதிகளில் எவ்வளவு மழை பெய்துள்ளது? முழு விவரம் இதோ!

 
rain

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. 

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் மழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து 12 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த தொடர் மழையால் சென்னை வெள்ளக்காடாக மாறியது. புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகியவையும் மிதக்க தொடங்கின. பேருந்து போக்குவரத்து முதல் விமானப் போக்குவரத்து வரை அனைத்தும்  பாதிக்கப்பட்டது. பல்வேறு சாலைகள் போக்குவரத்து செல்ல முடியாமல் துண்டிக்கப்பட்டன. பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. பல்வேறு பகுதிகளிலும் மின்மோட்டார்கள் மூலம் மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதேபோல் மின் விநியோகமும் படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது. 

rain

இந்த நிலையில்,  சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை பெருங்குடியில் 45 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதேபோல் பூந்தமல்லியில் 34 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும் ஆவடியில் 28 செ.மீ. மழையும், காட்டுப்பாக்கத்தில் 27 செ.மீ. மழையும், தாம்பரம் மற்றும் வட சென்னையில் 24 செ.மீ. மழையும், மாமல்லபுரம் மற்றும் ஐஸ்ஹவுஸில் 22 செ.மீ.மழையும், திருவிக நகர் மற்றும் கோடம்பக்கத்தில் 21 செ.மீ. மழையும், சோழிங்கநல்லூர் மற்றும் மீனம்பாக்கத்தில் 19 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.