ரேஷன் கார்டை டிஜிட்டல் வடிவில் ஆன்லைனில் இருந்து டவுன்லோடு செய்வது எப்படி?
முதலில் தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpds.gov.in என்ற பக்கத்திற்குச் செல்லவும். முகப்புப் பக்கத்தின் வலது பக்கத்தில் உள்ள "பயனாளி நுழைவு" என்ற ஆப்சனை கிளிக் செய்யவும். உங்கள் ரேஷன் கார்டுடன் இணைக்கப்பட்ட பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிடவும். திரையில் தோன்றும் 'Captcha' குறியீட்டைச் சரியாக டைப் செய்யவும்.
இப்போது உங்கள் மொபைலுக்கு ஒரு OTP வரும். அதை உள்ளிட்டு 'பதிவு செய்' என்பதைக் கிளிக் செய்யவும். உள்ளே சென்றதும் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள் அடங்கிய பக்கம் திறக்கும். அதில் இடதுபுறம் உள்ள மெனுவில் Smart Card Print என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது உங்கள் ஸ்மார்ட் கார்டின் மாதிரித் தோற்றம் திரையில் தெரியும்.
கீழே உள்ள "Download PDF" அல்லது "சேமி" என்ற பொத்தானை அழுத்தவும். இப்போது உங்கள் மொபைல் அல்லது கணினியில் ரேஷன் கார்டு பதிவிறக்கம் ஆகிவிடும். இதை நீங்கள் லேமினேட் செய்து அவசரத் தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யப்படும் இந்த E-Ration Card அனைத்து தேவைகளுக்கும் அதிகாரப்பூர்வமான ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படும்
TNPDS இணையதளம் மட்டுமின்றி, 'TNPDS' என்ற மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்தும் இதே முறையில் ஸ்மார்ட் கார்டைப் டவுன்லோடு செய்யலாம்
தமிழ்நாட்டில் 5 வகையான கார்டுகள் உள்ளன. PHH - அரிசி உள்ளிட்ட அனைத்துப் பொருட்கள். PHH-AAY: அந்தியோதயா அன்ன யோஜனா (35 கிலோ அரிசி). NPHH: அரிசி உள்ளிட்ட பொருட்கள். NPHH-S: சர்க்கரை மட்டும். NPHH-NC: பொருட்கள் இல்லாத அடையாள அட்டை மட்டும். நீங்கள் புதிய கார்டுக்கு விண்ணப்பித்திருந்தால், அதன் நிலையை (Status) அதே இணையதளத்தில் "மின்னணு அட்டை விண்ணப்பத்தின் நிலை" என்பதை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம். 'Approved' என்று வந்தவுடன் மேலே சொன்ன முறையில் டவுன்லோடு செய்யலாம்.


