மழைநீர் தேங்காமல் தடுப்பது எப்படி? முதல்வரிடம் திருப்புகழ் கமிட்டி அறிக்கை தாக்கல்!!

 
TNGOVT

சென்னையில் வெள்ள தடுப்பு மேலாண்மை திட்டத்திற்கான இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

சென்னையில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கவும், வெள்ள நீர் வடிகால்வாய் வடிவமைக்கவும், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது.
இதன் மூலம் சுற்றுச்சூழல் நகர திட்டமிடுதல் , பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.  இக்குழுவில் சுற்றுச்சூழல் நகரத் திட்டமிடல், பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த 14 நிபுணர்கள் நியமிக்கப்பட்டனர்.

stalin

இதற்கான ஆலோசனை கூட்டம் கடந்த நவம்பர் மாதம் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.  அதில் கனமழையால் ஏற்பட்ட வெள்ள சேதங்களை பார்வையிட்டதுடன்,  மழைநீர் தேங்கிய  தாழ்வான பகுதிகள் போன்ற பல்வேறு இடங்களில்,  தனித்தனியாக குழுவாக சென்று,  இந்த குழு ஆய்வு மேற்கொண்டது.  டிசம்பர் 31-க்குள் ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது.  

stalin

இந்நிலையில் சென்னையில் மழைநீர் தேங்காமல் தடுப்பது குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தற்காலிகமாக செய்ய வேண்டிய பணிகள் நிரந்தரமாக செய்ய வேண்டிய பணிகள் என்ற அடிப்படையில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையிலான குழு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கையை சமர்ப்பித்தனர். சென்னையில் மழை நீர் வடிகால்களை அகலபடுத்துவதுடன் ஆழப்படுத்த வேண்டும், புறநகர் பகுதிகளில் வடிகால் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், உயரத்தில் இருக்கும் மழைநீர் வடிகால் கால்வாய்களை சமப்படுத்த வேண்டும் என்று அக்குழு வலியுறுத்தியுள்ளது.