திருப்பரங்குன்றம் அயோத்தியாக மாறினால் என்ன தவறு?- ஹெச்.ராஜா

 
Hraja Hraja

திருப்பரங்குன்றம் அயோத்தியாக மாறினால் என்ன தவறு? அயோத்தி என்ன கெட்ட வார்த்தையா..?அயோத்தி இந்துக்களின் புனிதமான இடம்....இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிற திக, திமுக விசிக தான் இந்து விரோதி என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஹெச். ராஜா, “தமிழ்நாட்டில் உள்ள இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமான சொத்துக்களை சரியான முறையில் பாதுகாத்து அதிலிருந்து வரும் வருமானத்தை கணக்கில் வைக்க வேண்டும் அதை திமுக செய்யவில்லை. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு கடற்கரையில் தான் சமாதி வைக்க வேண்டுமா இதைக் கேட்டால் என்ன ஆகும். ஆனால் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு கடற்கரையில் சமாதி வைக்க வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடினீர்கள் நீதிமன்றம் அதற்கு அனுமதி கொடுத்தது அதை செயல்படுத்த வேண்டும் என்று கூறியதை தொடர்ந்து அப்போது தமிழ்நாடு முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி பெருந்தன்மையுடன் நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தினார். இப்போ அந்தப் பெருந்தன்மை ஏன் தமிழ்நாடு முதலமைச்சருக்கு இல்லை. எனவே திமுக இந்து விரோத சக்திகள்.

திருப்பரங்குன்றம் வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய தீர்ப்பை எதிர்த்து அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர் ஆனால் நீதிமன்றம் அதை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டது. இன்றைக்கு அமலில் இருப்பது சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய உத்தரவு தான் அதை செயல்படுத்த தவறிய திமுக தான் சட்டவிரோதமாக செயல்படுகிறது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இதுவரை இஸ்லாமியர்கள யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.திருப்பரங்குன்றம் விவகாரத்தை வைத்து வாக்கு வங்கி அரசியல் நடத்துவது திமுக தான். இந்து விரோத தீய  சக்திகள் நீங்கள் இந்து கோயில்களை மிஸ் யூஸ் பண்ணுகிறீர்கள் அதற்கு இந்து சமுதாயம் விடாது. அயோத்தி என்ன கெட்ட வார்த்தையா  இந்துக்களின் உரிமை அதை கேட்பதற்கு அறிவாலயம் யார்.

தமிழ்நாட்டில் நடந்து வரும் திமுகவின் இந்து விரோத  ஆட்சியை பீகாரில் எப்படி லாலு பிரசாத் குடும்ப ஆட்சி தூக்கி எரியப்பட்டதோ அதேபோல் வரும் 2026 இல் கருணாநிதியின் குடும்ப ஆட்சி தமிழ்நாட்டிலிருந்து தூக்கி எறியப்படும். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முஸ்லீம்கள் யாரும் தீபம் ஏற்ற எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, இந்த விவகாரத்தில்  திமுக தான் இந்து விரோத சக்தியாக செயல்பட்டு வருகிறது நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதில் இவர்களுக்கு என்ன சிக்கல், திருச்செந்தூரில் 300 கோடி அளவிற்கு திருப்பணி நடந்துள்ளது, ஆனால் அது முறைகேடாக நடந்துள்ளது. அதேபோல் முருகன் மாநாடு நடத்திய பழனியில் அதன் பின்பு இதுவரை வரவு செலவு கணக்கு காட்டவில்லை அப்படி என்றால் இந்து அறநிலையத்துறை அமைச்சரை திருடன் என்று சொல்லலாமா? திருமாவளவன் உள்ளிட்டோர்  திமுகவை எதிர்த்து தான் மக்கள் நல கூட்டணியை அமைத்தார் ஆனால்   இப்போது திமுகவில் ஐக்கியமாகி உள்ளார்,அப்போது அவர்கள் கூறிய கருத்தை இப்போது ஏற்க முடியுமா? திருப்பரங்குன்றம் அயோத்தியாக மாறினால் என்ன தவறு அயோத்தி என்ன கெட்ட வார்த்தையா..?அயோத்தி இந்துக்களின் புனிதமான இடம். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிற திக, திமுக விசிக தான் இந்து விரோதி. தமிழ்நாடு மக்கள் ஒரு ஆட்சியை தூக்கி எறிய வேண்டும் என்றால் யார் பிரதானமாக ஆட்சிக்கு வருவார்கள் என தெரிந்து அவர்களுக்கு வாக்களிப்பார்கள்.
பிறர் பேசுவதற்கு நான் பதில் சொல்ல முடியாது” என்ற தெரிவித்தார்.