தமிழர்களை காட்டுமிராண்டிகள் என விமர்சித்தவர் பெரியார்- ஹெச்.ராஜா
தமிழ் மீதோ, தமிழர்கள் மீதோ, தமிழகத்தின் மீதோ ஈவெரா அவர்களுக்கும் அவரது வழித்தோன்றல்களுக்கும் ஒருபோதும் அக்கறையோ, அபிமானமோ இருந்தது கிடையாது என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஹெச்.ராஜா தனது எக்ஸ் தளத்தில், “தமிழ் மீதோ, தமிழர்கள் மீதோ, தமிழகத்தின் மீதோ ஈவெரா அவர்களுக்கும் அவரது வழித்தோன்றல்களுக்கும் ஒருபோதும் அக்கறையோ, அபிமானமோ இருந்தது கிடையாது. அதனால் தான் ஈவெரா தமிழை காட்டுமிராண்டி மொழி என்றும்... தமிழர்களை காட்டுமிராண்டிகள் என்றும் விமர்சித்தார்... அவரது கொள்கை வழித்தோன்றலான கருணாநிதி அவர்கள் தமிழன் சோற்றால் அடித்த முண்டம்! சொரணை இல்லாத பிண்டம்! என்று தமிழர்களை விமர்சித்தார்...
தமிழ் மீதோ, தமிழர்கள் மீதோ, தமிழகத்தின் மீதோ ஈவெரா அவர்களுக்கும் அவரது வழித்தோன்றல்களுக்கும் ஒருபோதும் அக்கறையோ, அபிமானமோ இருந்தது கிடையாது.
— H Raja (@HRajaBJP) January 14, 2025
அதனால் தான் ஈவெரா தமிழை காட்டுமிராண்டி மொழி என்றும்...
தமிழர்களை காட்டுமிராண்டிகள் என்றும் விமர்சித்தார்...
அவரது கொள்கை வழித்தோன்றலான…
தமிழ் மீதும், தமிழர்கள் மீதும் பற்று இல்லாத காரணத்தால் தான் ஈவெரா தனது இயக்கத்திற்கு "தமிழர் கழகம்" என பெயர் சூட்டாமல் "திராவிடர் கழகம்" என பெயர் சூட்டினார். ஈவெராவின் கொள்கை வழித்தோன்றலான அண்ணாதுரை அவர்கள் தான் உருவாக்கிய அரசியல் இயக்கத்திற்கு "தமிழர் முன்னேற்ற கழகம்" என பெயர் சூட்டாமல் "திராவிட முன்னேற்ற கழகம்" என பெயர் சூட்டினார். ஆகவே திராவிடம் பேசுகிறவர்களுக்கு தமிழ் மீதோ, தமிழர்கள் மீதோ, தமிழகத்தின் மீதோ எள்ளளவும் பற்றோ, பாசமோ, நேசமோ இருந்தது கிடையாது. தீவிரவாதம் எவ்வளவு ஆபத்தானதோ..!! அவ்வளவு ஆபத்தானது திராவிட வாதம்..!!” எனக் குறிப்பிட்டுள்ளார்.


