விஜயகாந்த் மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கும் ஈடு செய்ய இயலாத இழப்பு- ஹெச்.ராஜா

 
hraja

தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் மறைவுக்கு பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா இரங்கல் தெரிவித்துள்ளார்.

h.raja

தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் இன்று காலை உயிரிழந்தார், அவருக்கு வயது 71. பல ஆண்டுகளாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த், நேற்று முன்தினம் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வென்டிலேட்டர் சிகிச்சை தரப்படுவதாக தேமுதிக அறிக்கை வெளியிட்டது. இந்த சூழலில் விஜயகாந்த் இன்று காலை உயிரிழந்தார். விஜயகாந்தின் மரணச் செய்தியை அறிந்த தேமுதிக தொண்டர்களும் அவரின் ரசிகர்களும் கண்ணீர் கடலில் மூழ்கியுள்ளனர்.

இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், “அன்பு நண்பர் கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்கள் காலமான செய்தி வருத்தமளிக்கிறது. பிரபல நடிகராகவும் நடிகர் சங்க தலைவராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் கட்சித்தலைவராகவும் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராகவும் மக்கள் சேவையில் மகத்தான பணிகளை செய்த நண்பரின் மறைவு தமிழக மக்களுக்கும் திரையுலகினருக்கும் தமிழகத்தின் எண்ணற்ற ஏழை எளிய மக்களுக்கும் தனிப்பட்ட முறையில் எனக்கும் ஈடு செய்ய இயலாத இழப்பாகும்.


கேப்டனை இழந்து வாடும் உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்களுக்கும் திரையுலகினருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா ஈசன் பாதமடைய வேண்டுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.