செஞ்சியில் பெரும் பரபரப்பு- சாலையில் சிதறிய சிலிண்டர்கள்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே செங்கல்பட்டு மாவட்டம் படாளம் பகுதியில் இருந்து 357 சிலிண்டர் ஏற்றிசென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து ஏற்படுத்தி உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து சிலிண்டர் ஏற்றி வந்த வாகனம் திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்தபோது செஞ்சி அருகே திருவண்ணாமலை சாலை பெட்ரோல் பங்க் அருகாமையில் திருவண்ணாமலை மார்க்கத்திலிருந்து கார் சென்று கொண்டிருந்தபோது சிலிண்டர் வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிலிண்டர் வாகனம் நடுரோட்டிலேயே சிலிண்டர் வாகனம் கவிழ்ந்து விபத்து ஏற்படுத்தி உள்ளது.
தகவல் அறிந்த செஞ்சி போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் வாகனத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காரில் பயணித்தவர்கள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். தகவல் அறிந்த தீயணைப்பு துறை வீரர்கள் சிலிண்டர் அப்புறப்படுதத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


