மனைவியின் ஆபாச புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட கணவர்!

 
ஆபாச இணையதளங்களின் மாயவலையில் இருந்து தப்புவது எப்படி? டாக்டர் ஷாலினியின் ஓபன் டாக்!

புதுச்சேரியில் பிரிந்த மனைவியின் ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு மிரட்டிய, காஞ்சிபுரத்தை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார்.

ஆபாச படம்

புதுச்சேரி கூடப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த காஞ்சனா என்ற பெண் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு யாரோ ஒருவர் என்னுடைய அந்தரங்க புகைப்படங்கள் சிலவற்றை மற்றும் பல்வேறு ஆபாச படங்கள் மற்றும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப் மூலமாக எனக்கும் என் உறவினர்களுக்கு அனுப்பி நான் சொல்லும் இடத்திற்கு தனிமையில் வர வேண்டுமென மிரட்டுகிறார். அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு சைபர் கிரைம் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இது சம்பந்தமாக சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து, இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப் எந்த ஊரில் இருந்து உபயோகப்படுத்துகிறது என்பதை கண்டறிந்து செல்போன் மூலமாக செயல்படுவது என்பதை கண்டுபிடித்து காஞ்சிபுரத்தை சார்ந்த பாண்டியன் (30) என்ற  நபரை திண்டிவனம் அருகே சென்று கைது செய்தனர்.

பின்பு அவரை புதுச்சேரி அழைத்து வந்து விசாரித்த போது, மேற்படி நபர் அந்த பெண்ணின் இரண்டாவது கணவர் என்றும் அவருக்கு பல்வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பது தெரிந்தும், காஞ்சனா, இதனை தங்கள் குடும்பத்தினரிடம் சொல்லி அவரை பிரிந்து தனியாக வந்து விட்டது தெரியவந்தது. மேலும் தன்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்றும் தன்னுடன் சேர்ந்து வாழவில்லை என்றால் உன்னை நான் அசிங்கப்படுத்துவேன் என்று இந்த புகைப்படங்களை எல்லாம்  காஞ்சனாவுக்கும் அவர்களுடைய உறவினர்களுக்கும் அனுப்பியது விசாரணையில் தெரியவந்தது.

பெண்களிடம் பழகி ஆபாச படம் எடுத்து மிரட்டல் ! தன்னை டாக்டர் எனக் கூறி பல பெண்களை வலையில் வீழ்த்திய இளைஞர் !

பெண்ணினுடைய தனிப்பட்ட புகைப்படங்களை அந்த பெண்ணிற்கும், அவர்களது உறவினர்களுக்கும் அனுப்பிய காரணத்தினால் இணைய வழி சட்டத்தின்படி மேற்படி நபரை காவல் ஆய்வாளர்கள் தியாகராஜன் மற்றும் கீர்த்தி தலைமையிலான போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து ஆபாச புகைப்படங்களை அனுப்ப பயன்படுத்திய செல்போன்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.