மனைவியின் கள்ளக்காதலனை அடித்துக் கொலை செய்த கணவன்
திருமணத்திற்கு புறம்பான உறவுடன் நடுரோட்டில் மனைவியுடன் சென்ற கள்ளக்காதலனை வழிமடக்கி நிறுத்து அடித்து கொலை செய்த கணவரால் பரபரப்பு ஏற்பட்டடது.

தெலங்கானா மாநிலம் ஜக்தியாலா கிராமப்புற மண்டலத்தில் உள்ள போரண்ட்லா கிராமத்தைச் சேர்ந்த விஸ்வநாத்திற்கு (31) அந்தர்கம் கிராமத்தைச் சேர்ந்த கங்காதர் மனைவியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமானது. கங்காதர் தம்பதிக்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில் அவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கங்காதர் வளைகுடா நாட்டில் வேலைக்கு சென்றதால் சமூக ஊடகம் மூலம் விஸ்வநாத்துடன் ஏற்பட்ட அறிமுகம் திருமணத்திற்குப் புறம்பான உறவாக மாறியது. இதனால் விஸ்வநாத் நான்கு மாதங்களுக்கு முன்பு ஜக்தியாலா நகரில் உள்ள பைபாஸ் சாலை அருகே ஒரு அறையை வாடகைக்கு எடுத்து கங்காதர் மனைவியுடன் வசித்து வந்தார்.
இந்தநிலையில் வளைகுடாவிலிருந்து திரும்பிய கங்காதருக்கு தனது மனைவிக்கு விஸ்வநாத்துடன் ஏற்பட்ட உறவை அறிந்து குழந்தைகளுக்காக பெரியவர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி தன்னுடன் வரும்படி அழைத்தார். கணவருடன் திரும்பி வரமாட்டேன என்று கூறியதால் வீட்டில் தாய் இல்லாமல் குழந்தைகள் தவித்தனர். இதனால் கங்காதர் விஸ்வநாத் மீது கோபமடைந்தார். சிவராத்திரியை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை விஸ்வநாத் சாரங்கபூர் மண்டலத்தில் உள்ள துப்பரஜன்ன திருவிழாவிற்கு தன்னுடன் வசித்து வந்த பெண்ணுடன் பைக்கில் சென்று கொண்டுருந்தார். திரும்பி வரும்போது, ஜகதியாலாவில் காத்திருந்த கங்காதர் மற்றும் அவரது கூட்டாளிகள் ஜகதியால் பைபாஸ் சாலையை விஸ்வநாத் வந்தபோது இரண்டு பேர் அவரை கட்டையால் கண்மூடித்தனமாக தாக்கினர். இதில் விஸ்வநாத் சம்பவ இடத்திலேயே இறந்தார். கொலைக்குப் பிறகு கங்காதர் தனது மனைவி வேண்டுமா உனக்கு என்று கூறி தப்பி சென்றனர். விஸ்வநாத்தின் தந்தை சந்திரய்யா அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக இன்ஸ்பெக்டர் கருணாகர் தெரிவித்தார். தலைமறைவாக உள்ள கங்காதர் மற்றும் உடன் வந்தவர்களை தேடி வருகின்றனர்.

