"காதல் திருமணம் திமுக-காங்கிரஸ் போல் இருக்கக்கூடாது" - அண்ணாமலை பேட்டி

 
tn

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,  ஒரே நாடு ஒரே தேர்தலை நடைமுறைப்படுத்துவது காலத்தின் கட்டாயம்.  ஆனால் 2024 ஆம் ஆண்டில் அதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவே உள்ளது.  ஒரே நாடு ஒரே தேர்தல் ஒரு காலத்தில் திமுகவின் கொள்கையாக இருந்தது.  

Annamalai

ஒரே நாடு ஒரே தேர்தல் 2024 தேர்தலில் நிச்சயம் வராது.  ராம்நாத் கோவிந்த் குழுவின் அறிக்கை வரவேண்டும்.  அதன் பின் நிறைய நடைமுறைகள் உள்ளன.  தொகுதி  மறுவரையறை மூலம் சட்டப்பேரவை நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகம் ஆகும். ஒரு எம்எல்ஏ பல லட்சம் மக்களை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. அது முடியவில்லை.

K Annamalai

 எதிர்வரும் 2024 மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை.  கோவை தொகுதியில் நான் போட்டியிட மாட்டேன்.  எனக்கு தலைவராக பணிகள் செய்யவே நேரம் சரியாக இருக்கிறது.  அதனால் கண்டிப்பாக தேர்தலில் போட்டியிட மாட்டேன். இளைஞர்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள். என் திருமணமும் காதல் திருமணம் தான் . காதல் திருமணம் திமுக-  காங்கிரஸ் போல் இருக்க கூடாது. மோடி- பாஜக போல் இருக்க வேண்டும் என்றார்.