"நல்லவர்களுக்காக வாக்கு கேட்டு வருவதில் பெருமை" - யாரை குறிப்பிட்டார் கமல்?
நல்லவர்களுக்கு வாக்கு கேட்டு வருவது எனக்கு பெருமையாக உள்ளது என்று கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தொடர்ந்து பரப்பரை மேற்கொண்டு வருகிறார் . அந்த வகையில் இன்று மதுரை ஆனையூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு. வெங்கடேசனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

இதற்காக அவர் சென்னையில் இருந்து இன்று விமான மூலம் மதுரைக்கு வருகை தந்தார். இதையடுத்து விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல் ஹாசன், சிறப்பாக பணியாற்றி வரும் வெங்கடேசனுக்காக நான் வாக்கு சேகரிக்க வந்திருக்கிறேன். நல்லவர்களுக்காக மீண்டும் வாக்கு கேட்டு வருவது எனக்கு பெருமையாக உள்ளது .இந்த தேர்தல் பிரச்சாரம் நல்லபடியாக போய்க்கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார்.


