"வாரம் 3 முறை; அந்த சுகமே தனி தான்" - குஷியான முதல்வர் ஸ்டாலின்!

 
ஸ்டாலின்

கொளத்தூர் தொகுதியில் ஹாட்ரிக் வெற்றி அண்டு முதலமைச்சராகியிருக்கிறார் ஸ்டாலின். முதலமைச்சரானாலும் தன் சொந்த தொகுதியை ஒருபோதும் மறப்பதில்லை. அவ்வப்போது திடீர் சர்ப்ரஸாக கொளத்தூர் பகுதிகளுக்குச் செல்வார். தடுப்பூசி முகாமை பார்வையிடுவது, ரேஷன் பொருட்கள் சரியாக விநியோகிக்கப்படுகிறதா என சோதனையிடுவது என அங்கே செல்வார். அந்த வகையில் தற்போது கொளத்தூர் டான்போஸ்கோ பள்ளியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டார். 

தமிழக ஆளுநருடன் மு.க.ஸ்டாலின் இன்று சந்திப்பு: என்ன காரணம்? - BBC News தமிழ்

அப்போது பேசிய அவர், "முதலமைச்சர் பொறுப்பை ஏற்ற பிறகு அதிகமாக பேசக் கூடாது. பேசுவதை விட செயலில்தான் திறமையைக் காட்ட வேண்டும். முதலமைச்சர் பதவியை மக்களுக்கு பணியாற்றும் வாய்ப்பாகவே கருதுகிறேன். இந்த விழாவை பார்க்கும் போது எனக்கு பாராட்டு விழா நடப்பது போல் உள்ளது. 5 ஆண்டுகளை இந்த அரசு நிறைவு செய்த பிறகு நல்ல முறையில் பாராட்டும் விதத்தில் இருக்க வேண்டும். தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது கொளத்தூர் தொகுதியில் வென்றதற்கான சான்றிதழை பெற்றேன்.

கிறிஸ்துமஸ் விழா

அதை எடுத்துக் கொண்டு கருணாநிதியின் சமாதிக்கு சென்று ஆசி பெற்றேன். கொளத்தூர் தொகுதியை பொருத்தவரை நான் சுயநலக்காரன்தான். நான் வாரத்திற்கு மூன்று முறை கொளத்தூர் தொகுதிக்கு வருகிறேன். ஆனாலும் பார்த்த முகம் தானே என இல்லாமல் என்னை எப்போதும் இன்முகத்துடன் வரவேற்கும் சுகமே தனி தான். தட்டுங்கள் திறக்கப்படும் என்பார்கள். ஆனால் நீங்கள் தட்டாமலேயே எங்கள் ஆட்சியில் பல நலத்திட்டங்களை செய்து வருகிறோம். இந்த ஆட்சியில் சொல்லாததையும் நாங்கள் செய்து வருகிறோம்” என்றார்.