“என்னோடு முதலமைச்சர் பேசியது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது”- ஒன்றிய செயலாளரின் தந்தை நெகிழ்ச்சி

 
s s

என்னோடு முதலமைச்சர் பேசியது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என முதியவர் முத்துவேல் தெரிவித்துள்ளார்.


தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துவேல். ஆரம்ப கால திமுக தொண்டரான இவர் தற்போது வரை திமுகவில் நீடித்து வருகிறார். இவரது மகன் சிவக்குமார் வழக்கறிஞர் தொழில் செய்து வரும் நிலையில், ஆலங்குளம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளராகவும் உள்ளார். இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று கட்சி நிர்வாகிகளை சந்தித்துப் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின் சிவக்குமாரையும் சந்தித்த போது, தனது தந்தை முத்துவேல் குறித்தும் பேசியுள்ளார். “எங்க அப்பா 1967 லில் இருந்து திமுக உறுப்பினர். இப்பவும் டீக்கடையில் உட்கார்ந்து அரசியல் பேசிட்டு இருக்காரு.. உங்க கூட போட்டோ எடுக்க கூட்டிட்டு வரவா” எனக் கேட்டுள்ளார். இதில் மகிழ்ச்சியடைந்த முதல்வர் முத்துவேலுடன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி, தன்னுடன் புகைப்படம் எடுக்க சென்னை வருமாறு அழைப்பு விடுத்தார். 

ஆலங்குளத்தில் இருந்து சென்னை புறப்பட்ட முத்துவேல் செய்தியாளர்களிடம் பேசுகையில், என்னோடு முதலமைச்சர் பேசியது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அண்ணா காலம் முதல் இன்று வரை கட்சிக்காக உழைத்து வரும் தனக்கு இது மிகப்பெரிய உற்சாகத்தையும் அங்கீகாரத்தையும் தந்திருக்கிறது என்றார்.