மறக்க முடியவில்லை... கள்ளக்காதலியை கொன்று வாலிபர் தற்கொலை..!

 
1 1

கர்நாடகாவை சேர்ந்தவர் ஆனந்த்ராஜ் சுதாரா. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், அதே கிராமத்தில் வசிக்கும் மஞ்சுளாவின் வீட்டுக்கு நேற்று முன்தினம் இரவு ஆனந்த்ராஜ் சென்றார்.

பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மஞ்சுளாவை அவர் சரமாரியாக குத்தி கொலை செய்தார். ஆனந்த்ராஜும் அதே கத்தியால் தன்னை குத்திக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்த நந்தகடா போலீசார், உடல்களை கைப்பற்றி விசாரித்தனர்.

இருவருக்கும் திருமணமாகி இருந்தாலும், ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களுக்குள் கள்ளக்காதல் மலர்ந்துள்ளது. இதுபற்றி அறிந்த மஞ்சுளாவின் கணவர் நந்தகடா போலீசில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து, ஆனந்த்ராஜை அழைத்து போலீசார் கண்டித்திருந்தனர்.

இதன்காரணமாக ஆனந்த்ராஜ், தனது கள்ளக்காதலி மஞ்சுளாவை கத்தியால் குத்தி கொன்று விட்டு அதே கத்தியால் தானும் குத்திக்கொண்டு தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது.