"அதிமுக - பாஜக விவகாரத்தில் தலையிட்டு கருத்து கூற விரும்பவில்லை" - அமைச்சர் துரைமுருகன்

 
duraimurugan

பாஜக கூட்டணியில் இருக்க கூடாது என்பதை உணர்ந்து தான் அதிமுக முடிவெடுத்துள்ளது என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

duraimurugan

இதுதொடர்பாக  செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன், "உச்சநீதிமன்ற தீர்ப்பை கடைசி தீர்ப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். கூட்டாட்சி தத்துவம் என்ன சொல்கிறதோ அதை பின்பற்ற வேண்டும்; உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம், பேரணிகள் நடத்தப்பட்டால் உச்சநீதிமன்றத்தின் தனித்தன்மை என்னவாகும்? என்பதை அரசியல் தெளிவு தெரிந்தவர்கள் உணர வேண்டும்; தங்கள் கருத்துக்கு எதிர்ப்பு வருகிறது, அதனை எப்படி கட்டுப்படுத்த வேண்டும்? என்பதை உச்சநீதிமன்றம் தீர்மானிக்க வேண்டும்;காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது;தமிழ்நாட்டிற்குத் தேவையான 12,500 கன அடி தண்ணீர் வேண்டுமென்று வற்புறுத்துவோம்" என்றார்.

eps

தொடர்ந்து பேசிய அவர், ""பாஜக கூட்டணியில் இருக்க கூடாது என்பதை உணர்ந்து தான் அதிமுக முடிவு எடுத்துள்ளது.அதிமுக கூட்டணி முறிவு, அவர்கள் வீட்டில் நடப்பது, அதைப் பற்றி நாம் கருத்து கூற முடியாது.  அதிமுக பாஜக கூட்டணியில் இருக்க வேண்டுமா? இருக்கக்கூடாதா என்பதை அந்த கட்சி தலைவர்கள் உணர வேண்டும். அதிமுகவினர் உணர்ந்துதான் இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள்" என்றார்.