காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் விபத்தில் மரணம் - செல்வப்பெருந்தகை இரங்கல்!!

 
selvaperunthagai selvaperunthagai

காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் விபத்தில் பலியான நிலையில் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும், வாலாஜாபாத் ஒன்றிய கவுன்சிலருமான திரு அளவூர் வி.நாகராஜ் அவர்கள் சாலை விபத்தில் அகால மரணம் அடைந்த செய்தியை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். 

tn

காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பில் அறிவிக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும், போராட்டங்களிலும் துடிப்போது கலந்து கொள்பவர். பழகுவதற்கு இனியவர். இவருடைய இழப்பு காங்கிரஸ் பேரியக்கத்திற்கு பேரிழப்பாகும்.

tn

அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தார்களுக்கும், காங்கிரஸ் பேரியக்க நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.