ஒரு மாத எம்.பி. சம்பளத்தை தேசிய பாதுகாப்பு நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளேன் - இளையராஜா

 
என் பாடல்கள் மீதான தடை தொடர்கிறது: இளையராஜா ஆவேசம்! என் பாடல்கள் மீதான தடை தொடர்கிறது: இளையராஜா ஆவேசம்!

ஒரு மாத எம்.பி. சம்பளத்தை தேசிய பாதுகாப்பு நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளேன் என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.

Ilaiyaraaja: ``என் ஒரு மாத சம்பளத்தை தேசத்துக்காக வழங்குகிறேன்" - இளையராஜா அறிவிப்பு

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. ஆபரேஷன் சிந்தூர் என்ற தலைப்பில் பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைப் பகுதியில் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. 

இந்நிலையில் ஒரு மாத எம்.பி. சம்பளத்தை தேசிய பாதுகாப்பு நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளேன் என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார். நமது துணிச்சலான வீரர்கள் எதிரிகளை மண்டியிட வைப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது, தீவிரவாதத்தை ஒழிக்க எனது இசை நிகழ்ச்சி கட்டணத்தையும் வழங்கவுள்ளேன் என இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.