"ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவர் மீது வழக்கு தொடுத்துள்ளேன்" - முதலமைச்சர் ஸ்டாலின்

 
stalin

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 1100 வது திருமண விழாவில் இரண்டு இணையர்களுக்கு திருமணம் நடத்தி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின் . இதன் பிறகு விழாவில் பேசிய அவர், திராவிட மாடல்  ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்று சிலர் தவறான கருத்துக்களை பரப்பி வருகின்றனர்.  பொய் செய்திகள் மூலம் மக்களை குழப்புகின்றனர். யார் என்ன செய்தாலும் அதற்கு அச்சப்பட மாட்டோம். 2024 நாடாளுமன்ற தேர்தலில் முற்றுப்புள்ளி வைப்போம். குறிப்பாக உயர் பொறுப்பில் இருந்த முன்னாள் போலீஸ் அதிகாரி நான் சொல்லாத ஒன்றை என் பெயரில் வாட்ஸ் அப் மூலம் பரப்பி வருகிறார். அவர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது .

stalin

ரூபாய் 5500 கோடி மதிப்புள்ள கோவில் சொத்துக்களை திமுக ஆட்சி அமீட்டுள்ளது. ஆனால் ஊடகங்களை பயன்படுத்தி பொய் செய்திகளை ஒன்றிய  அமைச்சர் நிர்மலா சீதாராமன் பரப்பி வருகிறார். உண்மையாக பக்தி இருந்தால் திமுக ஆட்சியை பாராட்டி இருக்க வேண்டும். அவர்களுக்கு பக்தி இல்லை. மக்களை ஏமாற்றுவதற்காக பாஜகவினர் பகல் வேஷம் போடுகிறார்கள். அதுதான் உண்மை.

கட்சிக்கு இளைஞர்கள் தேவை என்று காரணத்தால் தான் இளைஞர் அணி உருவாக்கப்பட்டது. அந்த இளைஞரணி இன்று கம்பீரமாக உதயநிதி ஸ்டாலின் தலைமையில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. மோட்டார் சைக்கிள் பேரணி மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் எழுச்சி ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார் என்றார்.

tn


முன்னாள் டிஜிபி-யும் அதிமுக முன்னாள் எம்எல்ஏவும் நடராஜ் சமீபத்தில் வாட்ஸ் அப் குழுக்களில் முதலமைச்சர் மற்றும் அரசு குறித்து போலீஸ் செய்திகளை பரப்பியதாக புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில் முதலமைச்சரின் மு.க. ஸ்டாலின் விழா மேடையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.