”எனக்கே அதிகாரம் உள்ளது... பா.ம.க.வின் பொருளாளராக திலகபாமா தொடர்வார்”- அன்புமணி ராமதாஸ்

 
 பா.ம.க.வின் பொருளாளராக திலகபாமா தொடர்வார் என்று அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு   பா.ம.க.வின் பொருளாளராக திலகபாமா தொடர்வார் என்று அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு 

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பா.ம.க.வின் பொருளாளராக திலகபாமா தொடர்வார் என்று அறிவித்துள்ளார். 

பாமக பொருளாளராக இருந்த திலகபாமாவிடம் இருந்து கட்சி பொறுப்பை பறித்து, புதிய மாநில பொருளாளராக சையத் மன்சூரை பாமக நிறுவனர் ராமதாஸ் நியமித்த நிலையில், பாமக பொருளாளராக திலகபாமா நீடிப்பார் என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் பொருளாளராக பொதுக்குழுவால் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட திருமதி. திலகபாமா அவர்கள் அப்பொறுப்பில் தொடர்வார் என்று அறிவிக்கப்படுகிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகளும்  அவருக்கு தொடர்ந்து முழு ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அன்புமணி கூறியுள்ளார். 

பாமக பொதுக்குழு என்னை தலைவராக முறைப்படி தேர்வு செய்து தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆகவே பாமகவில் நிர்வாகிகளை நியமிக்க, நீக்க தலைவரான எனக்கே அதிகாரம் உள்ளது என்றும் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். மேலும் பாமகவின் பொருளாளர் திலகபாமா அவர்கள் உள்பட அனைத்து மாவட்டச் செயலாளர்கள், அனைத்து நிலை பொறுப்பாளர்களும் அவரவர் பொறுப்புகளில் தொடர்வார்கள். இதில் குழப்பத்திற்கு இடமே இல்லை என்றும் அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.