தப்பு பண்ணிட்டேன்.. 2 முறை கொடுத்தாங்க..!! 3வது முறை நானே..!!? - நடிகர் ஸ்ரீகாந்த் பரபரப்பு வாக்குமூலம்..!!

 
srikanth srikanth


போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நடிகர் நீதிமன்றத்தில்  தான் தவறு செய்துவிட்டதாகக் கூறி மன்னிப்புக் கேட்டுள்ளார். 

போதைப்பொருள் விற்பனை செய்ததாக சேலம் மாவட்டம், சங்ககிரியைச் சேர்ந்த  பிரதீப் குமாரை போலீஸார் கைது செய்த நிலையில், அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்பையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவைச் சேர்ந்த ஜான், அதிமுக முன்னாள்  ஐடி விங் நிர்வாகி பிரசாத்,  நடிகர் ஸ்ரீகாந்த் என அடுத்தடுத்து பலர் சிக்கி வருகின்றனர்.  நடிகர் ஸ்ரீகாந்திடம் தொடர்ந்து 12 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில்  அவர் போதைப்பொருள் பயன்படுத்தியதும் உறுதியானதை அடுத்து  சென்னை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி தயாளன் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டார். போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த்துக்கு ஜூலை 7ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.          

தப்பு பண்ணிட்டேன்.. 2 முறை கொடுத்தாங்க..!! 3வது முறை நானே..!!? - நடிகர் ஸ்ரீகாந்த் பரபரப்பு வாக்குமூலம்..!!                                    
அப்போது தான் தவறு செய்துவிட்டதாக உருக்கமாக பேசிய நடிகர் ஸ்ரீகாந்த்,  தனது மகனை கவனித்துக்கொள்ள வேண்டும் என்றும், குடும்பத்தில் பிரச்சனைகள் இருப்பதாலும் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். வெளிநாடு செல்ல மாட்டேன், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன் என்று எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி தயாளனிடம் ஸ்ரீகாந்த் கோரிக்கை வைத்த நிலையில், இங்கு ஜாமீன் கோர முடியாது என்றும், எண்டிபிஎஸ் சிறப்பு நீதிமன்றத்தில் தான் ஜாமீன் பெற முடியும் எனவும் கூறிய நீதிபதி, ஸ்ரீகாந்துக்கு   ஜூலை 7ம் தேதி வரை 14 நாட்களுக்கு நீதிமன்றம் காவல் விதித்து உத்தரவிட்டார்.  தொடர்ந்து அவர் புழல் சிறையிலும் அடைக்கப்பட்டார்.  அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

மேலும், அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் தான் தனக்கு கொகைன் பழக்கத்தை கற்றுத்தந்தார் என்றும்,  ‘தீங்கிரை’ படத்திற்காக பிரசாத் தனக்கு ரூ.10 லட்சம் பணம் தர வேண்டி இருந்ததாகவும், பணத்தை கேட்கும் போதெல்லாம் பிரசாத் கொகைன் வாங்கித் தருவார் என்றும் வாக்குமூலம் அளித்துள்ளார்.  2 முறை பயன்படுத்திய பின்னர் 3வது முறை நானே கொக்கைன் கேட்கும் நிலை ஏற்பட்டதாகவும், கடைசியாக பிரசாத் வேறொரு வழக்கில் கைதாவதற்கு முன்பு  250 கிராம் கொகைன் தந்ததாகவும் ஸ்ரீகாந்த் தெரிவித்திருக்கிறார்.  8 முறை பிரசாத்  போதைப்பொருள் வாங்கிக்கொடுத்ததாகவும் கூறப்படும் நிலையில், அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.