‘என்னிடம் அரசியல் கேள்வி கேட்காதீங்கனு சொல்லிருக்கேன்’ - கடுப்பான ரஜினி..

 
rajinikanth

‘என்னிடம் அரசியல் கேள்விகள் கேட்காதீர்கள்’ என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த், ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து சென்னை திரும்பினார். இன்று காலை சென்னை விமான நிலையம் வந்தடைந்த அவரிடம், செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். நடந்து சென்றவாரே பதிலளித்துச் சென்ற ரஜினிகாந்திடம், செய்தியாளர் ஒருவர் ‘அமைச்சர் உதயநிதிக்கு  துணை முதல்வர் பதவி வழங்கப்படுமென செய்திகள் வெளியாகியுள்ளது. அதைப்பற்றி?” என கேள்வியெழுப்பினார்.  அதற்கு “என்னிடம் அரசியல் கேள்விகள் கேட்காதீர்கள் என சொல்லியிருக்கிறேன் ஏற்கனவே” என சற்று கோபமாக பதிலளித்தார். 

rajini

மேலும், வேட்டையன் திரைப்படம் நன்றாக வந்துள்ளதாகவும், இசை வெளியீட்டு விழாவில் யார் யார் கலந்து கொள்ளவுள்ளார்கள் என்பது பற்றி சரியாக தெரியவில்லை என்றும் அடுத்தடுத்த கேள்விகளுக்கு பதிலளித்தவாறே நடந்து சென்றார். 

இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘வேட்டையன்’ திரைப்படம், அக்டோபர் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நடிகர்கள் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெறுகிறது.