"அந்த நடிகைதான் வேண்டும்" ஏ.வி.ராஜு பரபரப்பு பேட்டி - இயக்குநர் சேரன் ஆவேசம்!!

 
Cheran capsized money minded people for the debacle of Rajavukku Check

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சேலம் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு சமீபத்தில் அளித்துள்ள பேட்டி மிகவும் சர்ச்சைக்கு உள்ளானதாக மாறி உள்ளது.  எடப்பாடி பழனிசாமி தொடர்பான அடுக்கடுக்கான புகார்களை முன் வைத்துள்ள இவர்,  ஈபிஎஸ் தன்னை கட்சியில் இருந்து நீக்கியது செல்லாது. எடப்பாடி கட்சியை நடத்த தெரியாமல் நடத்திக் கொண்டிருக்கிறார் என்றும் விமர்சித்தார் அத்துடன் கூவத்தூரில் காசு கொடுத்து ஆட்சிக்கு வந்தவர் தானே இவர் என்றும் சாடியுள்ளார்.

TN

கூவத்தூர் விவகாரம் குறித்து பேசிய அவர்,  நீ சாதாரண ஒரு எம்எல்ஏ. நீ கூவத்தூரில் என்ன கூத்து அடித்தாய் என்று தெரியும். அதிமுக எம்எல்ஏ வெங்கடாசலம் என்ன கூத்து அடித்தார். என்ன செய்தார் .அங்கே நடிகைகளுடன் என்ன செய்தார் .என்றெல்லாம் தெரியும். அந்த சின்ன வயசு  நடிகை வேண்டும் என்று வெங்கடாசலம் கேட்டுக்கொண்டார்.  அந்த பிரபல நடிகையை அவர் கேட்டார். அவர்தான் வேண்டும் என்று அடம் பிடித்தார். நான் கூவத்தூரில் இவரை பார்க்க போனேன். அங்கே என்ன எல்லாம் நடக்கிறது என்று பார்க்கப் போனேன். அப்புறம் அங்கு கருணாஸ் அங்கு இருந்தார்.  அவர் தான் ஏற்பாடு செய்தார். பாவம் அந்த பிரபல நடிகைக்கு 25 லட்சம் கொடுத்து அழைத்து வந்தார்கள். எல்லா நடிகையையும் ஏற்பாடு செய்தது கருணாஸ் தான். எல்லா நடிகையும் இருந்தாங்க. அவரவர் கேட்டதை பூர்த்தி செய்தார்கள். யார் என்ன வேண்டும் என்று கேட்டார்களா அதை கொடுத்தனர். கணக்கு வழக்கு எல்லாம் இல்லை இதற்கெல்லாம் காசு கொடுத்தவர் எடப்பாடி பழனிசாமி தான் என்று கூறியுள்ளார். 


இந்நிலையில் நடிகரும், இயக்குநருமான சேரன் தனது சமூகவலைதள பக்கத்தில், வன்மையாக கண்டிக்கிறேன்.. எந்த ஆதரமுமின்றி பொது வெளியில் திரைத்துறையினர் பற்றி பெயர் சொல்லி அவதூறு கிளப்பிய இவரை சட்டமும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்...  @VishalKOfficial @Karthi_Offl நடிகர் சங்கம் இதற்கு தகுந்த பதிலும் நடவடிக்கையும் எடுக்கும் என நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.