நான் ஒன்பது கோரிக்கைகளை வைக்க விரும்புகிறேன் - பிரதமர் மோடி..!
கோவா மாநிலத்திலுள்ள ஸ்ரீ சமஸ்தான் கோகர்ண ஜீவோத்தம் மடத்தின் 550வது ஆண்டு விழாவையொட்டி நினைவு நாணயம், தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் போது தான் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற கனவு நனவாகும். நான் ஒன்பது கோரிக்கைகளை வைக்க விரும்புகிறேன். இந்த கோரிக்கைகள் ஒன்பது தீர்மானங்களைப் போன்றவை.
* தண்ணீரை சேமிக்க வேண்டும்.
* மரங்கள் நட வேண்டும்.
* தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
* சுதேசி பொருட்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
* நாட்டின் பல்வேறு பகுதிகளைப் புரிந்துகொள்ள நாம் பாடுபட வேண்டும்.
* இயற்கை விவசாயத்தை நமது வாழ்வின் ஒரு பகுதியாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
* ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஏற்றுக்கொள்ள வேண்டும். திணை வகை உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். நமது உணவு பயன்பாட்டில் எண்ணெயின் அளவை 10 சதவீதம் குறைத்துக் கொள்ள வேண்டும்.
* விளையாட்டுக்கள் மற்றும் யோகா பயிற்சியில் ஈடுபட வேண்டும்.
* ஏழைகளுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்ய வேண்டும்
வளர்ச்சி அடைந்த பாரதம் நோக்கிய பயணத்தில் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். சமூகம் ஒன்றுபடும்போது, ஒவ்வொரு துறையும் வளர்ச்சி அடைய முடியும். அப்போதுதான் இந்தியா பெரும் முன்னேற்றம் அடையும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


