"பிரதமர் மோடி மீது அமித்ஷாவுக்கு என்ன கோபம் என தெரியவில்லை?" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 
mk stalin

தமிழர் ஒருவர் பிரதமராக்கப்படுவார் என்ற அமித்ஷாவின் பேச்சை வரவேற்கிறேன்; எல்.முருகன் அல்லது தமிழிசைக்கு வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

stalin

இந்நிலையில் மேட்டூர் அணையை திறந்து வைத்த பின் முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது பேசிய அவர்,  கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த அரசு வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்து உழவர் நலன் சார்ந்த திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது குறிப்பாக கலைஞரின் அனைத்து கிராம வளர்ச்சி திட்டத்தை செயல்படுத்தி, அதன் மூலம் இரண்டு ஆண்டுகளில் இதுவரை 23.54 லட்சம் உழவர்கள் பயனடைந்துள்ளனர். திமுக ஆட்சியில் கட்டப்பட்ட கோயம்பேடு பேருந்து நிலையத்தை ஜெயலலிதா திறந்து வைத்தார், திமுக ஆட்சியில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக அவர் மாற்றினார். திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை வெளிப்படையாக எதிர்த்த ஜெயலலிதா, பின்னர் கல்வெட்டில் தனது பெயரைப் பொறித்து திறந்து வைத்தார்; இந்த வரலாறு எல்லாம் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிய வாய்ப்பு இல்லை. பாஜக ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு என எந்த ஒரு புதிய திட்டமும் கொண்டுவரப்படவில்லை.  தமிழ்நாட்டில் பிரத்தியேகமாக என்ன செய்தீர்கள் என்று கேள்விக்கு அமித்ஷா பதில் சொல்லவில்லை. தமிழ்நாட்டில் இருந்து ஒருவர் பிரதமராக வரவேண்டும் என்று அமைச்சரின் கருத்தை நான் வரவேற்கிறேன். பிரதமர் நரேந்திர மோடி மீது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு என்ன கோபமோ? தமிழிசை சௌந்தர்ராஜன் மற்றும் எல். முருகன் ஆகியோருக்கு பிரதமராகும் வாய்ப்பு இருக்கும் என நம்புகிறேன்.

MK Stalin

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது கூட்டணியில் இருந்த திமுக என்னென்ன திட்டங்கள் கொண்டு வந்தோம் என்று பட்டியலிட்டுள்ளோம். தமிழ்நாட்டில் எய்ம்ஸ் கொண்டு வருவோம் என திமுக ஆட்சியில் அறிவிக்கப்படவில்லை. பாஜக தான் அறிவித்தது ;அதை அவர்கள் தான் செயல்படுத்த வேண்டும் என்றார்.