‘வாழ்நாள் முழுவதும் உங்கள் கைகளை இறுகப்பற்றிக் கொள்கிறேன்’ - அமைச்சர் செந்தில் பாலாஜி உருக்கம்..
செந்தில் பாலாஜியின் தியாகம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டிருந்த நிலையில், வாழ்நாள் முழுமைக்கும் உங்கள் கைகளை இறுகப்பற்றிக் கொள்கிறேன் என அமைச்சர் செந்தில் பாலாஜி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட செந்தில் பாலாஜி, பல்வேறு சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு கடந்த 26ம் தேதி வெளியே வந்தார். 471 நாட்கள் சிறைவாசத்துக்குப் பிறகு வெளியே வந்த செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அவர் வகித்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை இலாக்கா கொடுக்கப்பட்டுள்ளது. அவரது தியாகத்தை பாராட்டி அமைச்சர் பதவி வழங்கப்பட்டதாக முதலமைச்சர் கூறியிருக்கிறார். இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரது எக்ஸ் தள பதிவில், “திரு. செந்தில்பாலாஜியின் தியாகத்தை நான் வாழ்த்தியதைச் சிலரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவரை வைத்து கழகத்துக்கு எதிரான சதிச்செயல்களைச் செய்ய ஒரு கூட்டம் திட்டமிட்டது. அதற்கு விலையாக 15 மாத சிறையை ஏற்றதுதான் தியாகம். தன்னால் இயக்கத்துக்குக் களங்கம் வரக்கூடாது என்று நினைப்பவர்களால்தான் இந்த இயக்கம் இயங்குகிறது' என இன்றைய அறிக்கையில் என்னை தாங்கிப்பிடித்துள்ள தாயுமானவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள் கோடி.. பல நூறு ஆண்டுகள் பெரும் தவம் செய்தாலும், உலகு காக்கும் உயர் கொள்கைக் கொண்டவரின் இந்த உன்னதமான அன்பை பெற இயலுமோ? உங்கள் கைகளை இறுகப்பற்றிக் கொள்கிறேன்.. வாழ்நாள் முழுமைக்கும்.!” என்று குறிப்பிட்டுள்ளார்.
471 நாட்கள் தனிமையின் இருள் நீங்கி சூரியனின் காலடியில்.
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) September 27, 2024
ஒவ்வொரு நாளும், நிமிடமும், நொடியும் உங்களையே நினைத்திருந்தேன்
தலைவரே.!
தாயுமானவராய் தாங்கினீர்கள்.. என் உயிர் உங்கள் காலடியில் சமர்ப்பணம்..
உங்கள் நம்பிக்கைக்கும் அன்பிற்கும் வாழ்நாள் முழுக்க நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்! pic.twitter.com/wtwJCYvg0R