"தடுப்பூசி போடாதவர்கள் குடி போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் போல..." - ராதாகிருஷ்ணன் பேட்டி!!

 
ias

தமிழகத்தில் இன்று 5வது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று தமிழகம் முழுவதும்  30 ஆயிரம் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.இதுவரை4 மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்ற நிலையில் இன்று 5வது மெகா  கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இதுவரை பயன்பெறாதவர்கள்  இன்றைய முகாம்களில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை  கேட்டுக்கொண்டுள்ளது.  இன்று இரவு 7 மணிவரை நடைபெறும் இந்த தடுப்பூசி முகாமில் 33 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

vaccine
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த  மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், "32,017 இடங்களில் 5வது தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது; 48.6 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன, மேலும் 7 லட்சம் தடுப்பூசிகள் வர உள்ளன. கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் குடி போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் போல, அவர்களால் மற்றவர்களும் பாதிப்படைவார்கள், தடுப்பூசி கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும்" என்றார். 

corona vaccine

இதனிடையே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்  பல்வேறு மாவட்டங்களில்  வாஷிங் மிஷின், மிக்ஸி, பிரஷர் குக்கர், செல்போன் என ஏராளமான பரிசுப் பொருட்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு குலுக்கல் முறையில் வழங்கப்படும் அறிவிக்கப்பட்டுள்ளன.