ஒமிக்ரான் எதிரொலி - மாவட்ட ஆட்சியர்களுக்கு ராதாகிருஷ்ணன் கடிதம்!!

 
Radhakrishnan

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் முறையாக கடைப்பிடிக்கிறார்களா? என்பதை கண்காணிக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.

நாட்டில் தற்போது ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவத் தொடங்கிவிட்டது.  இதுவரை இந்தியாவில் 415 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தை பொருத்தவரை 34 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவின் 108 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

radhakrishnan

இந்த சூழலில் இனிவரும் காலங்களில் மாவட்ட நிர்வாகங்கள் முறையாக வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.  இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில்,  பண்டிகைகள் , திருவிழாக்கள் ஆகியவற்றில் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றாமல் அலட்சியப் போக்குடன் பொதுமக்கள் அதிகளவில் கூடி வருகின்றனர்.  இது தொற்று பரவுவதற்கு காரணமாக அமைந்துவிடும்.  எனவே பாதிப்புகள் தொடர்ந்து கண்டறியப்படுவதால் உரிய வழிகாட்டுதலைப் பின்பற்றுவது அவசியம்.

radhakrishnan

 மாவட்ட வாரியாக சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்தவும், படுக்கைகள் மற்றும் அதன் இருப்பு குறித்த தகவல்களை அவ்வப்போது புதுப்பிக்க வேண்டும்,  பொது இடங்கள் , நோய் பாதிப்பு ஏற்படக் கூடிய இடங்களில் மக்கள் முறையாக முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்கிறார்களா? என்பதை மாவட்ட நிர்வாகங்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.  அத்துடன் அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அக்கடிதத்தில் அறிவுறுத்தியுள்ளார்.