கேப்டன் இருந்திருந்தால் ரஜினிக்காக நிச்சயம் இதை செய்திருப்பார் - பிரேமலதா நெகிழ்ச்சி..!!

 
கேப்டன் இருந்திருந்தால் ரஜினிக்காக நிச்சயம் இதை செய்திருப்பார் - பிரேமலதாக நெகிழ்ச்சி..!! கேப்டன் இருந்திருந்தால் ரஜினிக்காக நிச்சயம் இதை செய்திருப்பார் - பிரேமலதாக நெகிழ்ச்சி..!!


கேப்டன் இருந்திருந்தால் நிச்சயமாக ரஜினிகாந்திற்கு 50வது ஆண்டுவிழா விமரிசையாக கொண்டாடி இருப்பார் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாக தெரிவித்துள்ளார். 

திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. அந்தவகையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ரஜினிக்கு வாழ்த்து கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “திரைத்துறையில் 50 ஆண்டுகாலம் நிறைவு செய்திருக்கிறார் ரஜினிகாந்த் அவர்கள்... அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களை கேப்டன் சார்பாகவும் என் சார்பாகவும் மற்றும் தேமுதிக தொண்டர்கள் சார்பாகவும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கேப்டன் மீது பேரன்பு கொண்டவர் ரஜினிகாந்த் என்பது நாடறியும். 

rajini

கேப்டன் இருந்திருந்தால் நிச்சயமாக ரஜினிகாந்த்திற்கு ஐம்பதாவது ஆண்டு விழா விமர்சையாக கொண்டாடி இருப்பார். 

கேப்டன் மீதும் எங்கள் குடும்பத்தினர் மீதும் பேரன்பு கொண்டவர்கள் ரஜினிகாந்த் அவர்களும் அவரது குடும்பத்தினரும்.

திரை உலகில் உள்ள சங்கங்கள் எல்லாம் இணைந்து,சூப்பர் ஸ்டாராக ஐம்பது ஆண்டு காலம், தமிழ் திரையுலகில் வலம் வந்த ரஜினிகாந்த்  அவர்களுக்கு  மிகப்பெரிய பாராட்டு விழா எடுக்க வேண்டும். திரை உலகத்தில் உள்ள அனைவரும் இணைந்து  இந்தப் பாராட்டு விழாவை நடத்தினால்  சிறப்பாக இருக்கும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.