கணிதத்தையும் இசையையும் இணைத்து புதிய பாடத்திட்டம் - ஐஐடி இயக்குனர் காமகோடி

 
ச் ச்

மார்கழி மாதத்தை ஒட்டி, பாரதிய வித்யா பவன் மற்றும் தென் மண்டல கலாசார மையம் இணைந்து வழங்கும், பவன்'ஸ் மார்கழி உத்சவ் – 2025 துவக்க விழா சென்னை, மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவனில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் ஐஐடி இயக்குனர் காமகோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி, “2047ற்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் மோடி பல இடங்களில் பேசி வருகிறார். குழந்தைகளுக்கு பாரதிய கலாச்சாரம் மிகவும் முக்கியம், கலாச்சாரத்தை நீக்கிவிட்டால் பாரதத்துவம் போய்விடும். எனவே நமது கலாச்சாரத்தை பாதுகாக்கவேண்டும்.  கடந்த ஆண்டு முதல் music and Indian culture இல் பாடுப்பட்டவர்களுக்கு B.Tech படிப்பில் சிறப்பு admission கொடுத்துள்ளோம். அதில் 7 கலைஞர்கள் சேர்ந்துள்ளனர். Jee தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றாலும் கலை சார்ந்த கலைஞர்கள் இதன் மூலம் ஐஐடியில் படிக்க முடியும். அதற்கு நம்முடைய குழந்தைகளுக்கு நாட்டின் கலாச்சாரத்தை தெரியப்படுத்த வேண்டும்.

வளர்ந்த இந்தியாவை உருவாக்க பல புதிய சிந்தனைகள் தேவைப்படுகிறது. ஒரு நாடு முன்னேற வேண்டுமென்றால் தனிமனிதனின் வளர்ச்சியும் முக்கியம். கணிதத்தையும் இசையும் இணைத்து புதிய பாடத்திட்டத்தை ஐஐடி மெட்ராஸில் கொண்டுவர உள்ளோம். கர்நாடக இசையில் கணிதம் கலந்திருப்பதால்தான் எவ்வளவு கேட்டாலும் இசை நமக்கு சலிப்பதில்லை” என்றார்.