ஐஐடி வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை
Jun 27, 2025, 16:25 IST1751021755631
சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவியிடம் கட்டையைக் காட்டி மிரட்டி முடியைப் பிடித்து இழுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வடமாநில இளைஞர் கைது செய்யப்பட்டார்.

சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வடமாநிலத்தை சேர்ந்த ரோஷன் குமார் (22) கைது செய்யப்பட்டார். ஐஐடி வளாக உணவகத்தில் "Mumbai Chaat" என்ற கடையில் வேலைப்பார்த்த ரோஷன் குமார், மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். மாணவி கடைக்கு வரும் சமயத்தில், அவரிடம் கட்டையை காண்பித்து மிரட்டி, பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக மாணவி அளித்த புகாரின்பேரில், ரோஷன் குமாரை கைது செய்த கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.


