பாஜக பொறுப்பை ராஜினாமா செய்தார் இல.கணேசன்
பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் பாஜகவில் உள்ள பொறுப்புகளை ராஜினாமா செய்துள்ளார்.
மணிப்பூர் செயலாளராக பாஜகவின் மூத்த தலைவர் இல.கணேசன் நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுநராக இருந்த நஜ்மா ஹெப்துல்லாவின் பதவி காலம் கடந்த 20ஆம் தேதி நிலையில் புதிய ஆளுநராக இல.கணேசன் மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். தஞ்சாவூரை சேர்ந்த இல.கணேசன் அரசு பணியை ராஜினமா செய்துவிட்டு இளம் வயதிலேயே ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைந்து பாஜக சார்பில் பணியாற்றி வருகிறார்.
1991 ஆம் ஆண்டு மாநில அமைப்புச் செயலாளராக பணியாற்றி வந்த இவர் பாஜகவின் மாநில தலைவர் மற்றும் தேசிய தலைவர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார் . 2009 , 2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் தென் சென்னை தொகுதியில் இருந்து தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2016ஆம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். தற்போது இல. கணேசனுக்கு ஆளுநர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது அவரின் உண்மையாக உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என்று பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பாஜக தேசிய குழு உறுப்பினர் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளை ராஜினாமா செய்தார் இல. கணேசன். மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட நிலையில் ராஜினாமா கடிதத்தை பாஜக தலைவர் அண்ணாமலையிடம் வழங்கினார்.