கர்நாடகா கோயிலுக்கு ரூ.4 கோடி வைர கிரீடத்தை வழங்கிய இளையராஜா

 
ழ் ழ்

கர்நாடக மாநிலம் கொல்லூரில் அமைந்துள்ள மூகாம்பிகை மற்றும் வீரபத்ர ஸ்வாமிக்கு வைர கிரீடங்கள் மற்றும் தங்க வாளை கோவிலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா காணிக்கையாக வழங்கினார். 

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் கொல்லூரில் மூகாம்பிகை கோவில் உள்ளது. அவ்வப்போது இந்த கோவிலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கமாக வைத்திருப்பார். இந்த நிலையில் தனது சினிமா பயணத்தில் 50 ஆண்டு காலத்தை எட்டியுள்ளதால் சிறப்பு சாமி தரிசனம் செய்துள்ளார். கோவிலில் அமைக்கப்பட்டுள்ள கொல்லூர் மூகாம்பிகை மற்றும் வீரபத்ர ஸ்வாமிக்கு வைர கிரீடங்கள் மற்றும் தங்க வாள் கோவிலுக்கு காணிக்கையாக வழங்கியுள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா அவருடன் அவரது மூத்த மகன் கார்த்திக் ராஜாவும் சென்றுள்ளார். இதன் மதிப்பு 8 கோடி ரூபாய் வரையிலும் இருக்கலாம் என கூறப்படுகிறது. 

இளையராஜா சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் வைர கிரீடங்கள் மற்றும் தங்க வாளின் சில காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. வருகின்ற செப்டம்பர் 13 தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழக அரசு சார்பில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.