இனி ஆண்டுதோறும் இளையராஜா பெயரில் விருது!

 
1 1

இசைஞானி இளையராஜாவின் பொன்​விழா ஆண்​டு மற்றும் பாராட்டு விழா சென்னை நேரு உள்​விளை​யாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில், முதலமைச்சர் ஸ்டாலின், நடிகர்கள் ரஜினி, கமல்ஹாசன், இளையராஜாவின் குடும்பத்தினர் உட்பட பலர்  கலந்து கொண்டனர். அப்போது இளையராஜாவுக்கு முதலமைச்சர் நினைவுப் பரிசு வழங்கிக் கெளரவித்தார்.

இதையடுத்து உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், இசைத்துறையில் சாதிக்கும் இளைஞர்களுக்குத் தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் இளையராஜா பெயரில் விருது வழங்கப்படும் என அறிவித்தார்.

மேலும், இளையராஜாவுக்குப் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் எனவும் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்தார்.