'பராசக்தி' படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட தடை

 
பராசக்தி பராசக்தி

நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா நடித்துள்ள பராசக்தி படத்தை சட்ட விரோதமாக இணையதளத்தில் வெளியிட தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பராசக்தி நினைவுகூரும் பொள்ளாச்சியும் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டமும் I the  TNs anti hindi agitation that parasakthi is all about

நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா நடித்து, சுதா கொங்கரா இயக்கி, ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள பராசக்தி திரைப்படம் நாளை திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில், நாளை திரைக்கு வர உள்ள பராசக்தி திரைபடத்தை இணையதளங்களில் சட்ட விரோதமாக வெளியிட தடைவிதிக்க இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிடக்கோரி  படத்தின் தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டது.

இந்த மனு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, பட தயாரிப்பு நிறுவனம் சார்பில், முன்னணி நடிகர்களை கொண்டு பெரும் பொருள் செலவில் திரைப்படம் எடுக்கபட்டுள்ளதால், சட்ட விரோதமாக இணையதளத்தில் வெளியானால் ஈடு செய்யமுடியாத இழப்பு ஏற்படும் என தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி பராசக்தி படத்தை  இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிடுவதற்கு தடைவிதித்து உத்தரவிட்டார்.