'லியோ' திரைப்படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை!!

 
tt

'லியோ' திரைப்படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

leo

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ . திரிஷா, கௌதம் வாசுதேவ் மேனன், அர்ஜூன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் ,சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ள நிலையில் நாளை மறுநாள் லியோ திரைப்படம்  திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தமிழ் மட்டுமின்றி  தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற மொழிகளிலும் படம் வெளியாகவுள்ளது விஜய் ரசிகர்கள் ,மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது . 

leo

இந்நிலையில்  'லியோ' திரைப்படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. லியோ படத்தை சட்ட விரோதமாக 1,246 இணையதளங்களில் வெளியிட தடை விதிக்கக் கோரி பட தயாரிப்பு நிறுவனம் மனு தாக்கல் செய்திருந்தது. இதன் காரணமாக உயர்நீதிமன்றம் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.  நாளை வெளியாகும் லியோ திரைப்படத்தின் சிறப்பு காட்சி அரசு அறிவித்தபடி காலை 9 மணிக்கு தொடங்கப்படும் என்று லியோ பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்று லியோ தயாரிப்பு நிறுவன தரப்பு வழக்கறிஞர் காலை 7 மணிக்கு 7 மணி காட்சிக்கு அனுமதிக்கோரி உள்துறை செயலாளரிடம் மனு அளித்திருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.