"அச்சமில்லை.. அச்சமில்லை!" - காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பதிவு..!
தி.மு.க., கூட்டணியில் நீடிக்க வேண்டுமானால், ஆட்சியில் பங்கு வேண்டும்' என, தமிழக காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் குரல் எழுப்பி வந்தனர். 'ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது தமிழகத்திற்கு ஒத்து வராது' என, முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக மறுத்து விட்டார். என்ன தவறு? ஆனால், ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பதில் மாணிக்கம் தாகூர் போன்றோர் விடாப்பிடியாக உள்ளனர்.
'கூட்டணி நீடிக்க வேண்டுமானால், தி.மு.க.,வை தீவிரமாக விமர்சிக்கும் காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூருக்கு கடிவாளம் போட வேண்டும்; அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்; இல்லையென்றால் ஒட்டுமில்லை, உறவுமில்லை என்ற முடிவை எடுக்க நேரிடும்' என, காங்கிரஸ் மேலிடத்திற்கு, தி.மு.க., தலைமை கடும் எச்சரிக்கை விடுத்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் இன்று அச்சம் இல்லை. அச்சம் இல்லை. அச்சமென்ப தில்லையே என பாரதியாரின் பாடலை குறிப்பிட்டு சமூகவலைதளத்தில் பதிவிட்டு உள்ளார். ஏற்கனவே 'எங்களுக்கு மரியாதை கொடுக்கவில்லை என்றால், திருப்பி அடிப்போம். எம்.பி., எம்.எல்.ஏ., பதவி மண்ணாங்கட்டி பதவி' என மாணிக்க தாகூர் கூறி ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்டு வரும் நிலையில் இன்று இந்த பதிவு அரசியல் வட்டாரங்களில் பேசும் பொருளாகி உள்ளது.
— Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) February 17, 2026

