தென் மாவட்டங்களில் பெய்து வரும் அதிகனமழைக்கு மேகவெடிப்பு காரணமா? - பாலச்சந்திரன் பேட்டி

 
Balachandran Balachandran

தென் மாவட்டங்களில் மேலடுக்கு சுழற்சி காரணமாகவே அதிக கனமழை பெய்துள்ளது, மேகவெடிப்பு காரணம் அல்ல என சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். 
  
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில், சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:  1931ம் ஆண்டுக்குப் பிறகு பாளையங்கோட்டை பகுதியில் அதிகமழை பதிவாகியுள்ளது. மேலடுக்கு சுழற்சி காரணமாகவே அதிக கனமழை பெய்துள்ளது, மேகவெடிப்பு காரணம் அல்ல

. 90 செ.மீ மழை பெய்யும் என குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ரெட் அலர்ட் என்றால் 21 செ.மீ அளவுக்கு மேல், எவ்வளவு வேண்டுமானாலும் மழை பெய்யலாம் . மேலடுக்கு சுழற்சி காரணமாக இவ்வளவு மழை பெய்தது இதுவே முதன்முறையாகும். 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் தொடரும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 94 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு கூறினார்.