மழை பாதிப்பு - முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

 
stalin

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளி மண்டல சுழற்சி காரணமாக கடந்த 3 தினங்களாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அதீத கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போனது. இதுவரை தென்மாவட்ட வரலாற்றில் பதிவு செய்யப்படாத அளவிற்கு மழை கொட்டி தீர்த்து வருகிறது. ஏராளமான கிராமங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டு தீவாக காட்சியளிப்பதோடு எங்கும் போய்வர முடியாத அளவிற்கு துண்டிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள், சத்துணவு மையங்கள், ஆரம்ப சுகாதார மையங்கள், பள்ளிகளில் பொதுமக்களை தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு, உடை, போர்வைகள் போன்றவை வழங்கப்பட்டுவருகிறது.

M.K.Stalin

இந்நிலையில் சென்னை எழிலகத்தில் உள்ள அவசரகால செயல்பாட்டு அறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். தென் மாவட்டங்களில் நடைபெறும் மீட்பு மற்றும் நிவாரண பணிகள்  தொடர்பாக முதல்வர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். 

stalin

மழை பாதிப்புகள் குறித்து, அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை செய்தார். ஆலோசனையில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் பங்கேற்றுள்ளார். 4 மாவட்டங்களுக்கான சிறப்பு அதிகாரிகள் காணொலி வாயிலாக பங்கேற்றுள்ளனர்.