"மத்திய அரசின் இந்தி திணிப்பு என்று கூறுவது வாக்கு வங்கியின் அரசியலுக்காகவே" - ஜி.கே. வாசன்

 
ttn

மத்திய அரசின் இந்தி திணிப்பு என்று கூறுவது வாக்கு வங்கியின் அரசியலுக்காகவே என்று ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில மொழிக்கே முதல் இடம் . அந்த வகையில் நம் தமிழகத்தில் தாய்மொழி தமிழுக்குத்தான் முதலிடம் . அதில் மாற்றுக் கருத்து கிடையாது . இந்திய அளவில் பெரும்பாலான மாநிலங்களில் , ஏன் உலக அளவில் பெரும்பாலான நாடுகளில் ஆங்கிலம் தான் பொது மொழியாக , இணைப்பு மொழியாக இருக்கிறது . எனவே அவரவர் தாய் மொழிக்கு பிறகு ஆங்கிலமே ஆங்கிலமே ( Link Language ) பிரபலமான மொழியாக , வழக்கமான மொழியாக இந்தியா சுதந்திரத்திற்குப் பிறகு இதுவரை இருக்கிறது . 

gk

இந்தியை மூன்றாவது மொழியாக விரும்பி ஏற்கலாம் , ஏற்காமலும் இருக்கலாம் அல்லது பிறமாநிலங்களில் உள்ள எந்த மொழியை வேண்டுமானாலும் விரும்பி ஏற்கலாம் . இதில் கட்டாயபடுத்துதல் என்பது இதுவரை இல்லை . இனிமேலும் கட்டாயம் கூடாது . உதாரணத்திற்கு புதிய கல்வி கொள்கையில் இந்த நோக்கம் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது . எனவே இந்தி திணிப்பு என்பதில் எந்த உண்மையும் இல்லை . ஒரிரு நாட்களுக்கு முன்னர் பாரதப் பிரதமர் திரு . நரேந்திர மோடி அவர்கள் சட்டமந்திரிகள் மற்றும் சட்டத்துறை செயலாளர்கள் மாநாட்டில் நீதிமன்றங்களில் சாதாரண மக்களும் எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் அந்தந்த மாநில மொழிகளையே பயன்படுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

MK Stalin

அதோடு சட்டப்படிப்புகள் தாய்மொழியில் படிக்க வேண்டும் , வேண்டும் , அதற்கு சட்டப்படிப்பை தாய்மொழியில் உருவாக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார் . பாரதப் பிரதமரின் நிலை இப்படி இருக்க , இந்தி திணிப்பு என்பதற்கான எந்தவிதமான முகாந்திரமும் இல்லை . மத்திய அரசு இதில் எந்தவிதத்திலும் மாறுபடவில்லை என்பது மக்களுக்கு நன்கு புரியும் . தற்போழுது உள்ள அரசியல் சூழலில் தமிழகத்தில் இந்தி திணிப்பு என்பது வாக்கு வங்கிக்காக , இந்தியை பயன்படுத்திக்கொள்வது , அரசியல் ஆக்குவது மக்களுக்கு நன்கு புரிந்து இருக்கிறது , தெரிந்திருக்கிறது . இந்த இந்த உண்மை நிலையை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.