தமிழகத்தில் நாளை மறுநாள் சூப்பர் மெகா தடுப்பூசி முகாம்.. - பொது சுகாதார்த்துறை அறிவிப்பு..

 
corona vaccine

தமிழகத்தில்  நாளை மறுநாள் ( மே 8) ம் தேதி சூப்பர் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.  

உலக நாடுகளை கடந்த 2 ஆண்டுகளாக ஆட்டுவித்துக்கொண்டிருந்த  கொரோனா வைரஸின் தாக்கம் மெல்ல குறைந்திருக்கிறது.  இந்தியாவைப் பொறுத்தவரை கொரோனா கட்டுக்குள் வர பேராயுதமாக பயன்பட்டது கொரோனா தடுப்பூசிதான்..  பொதுமுடக்கம், முககவசம், தனிமனித இடைவெளி  போன்ற கட்டுப்பாடுகளும் பெருமளவு கைக்கொடுத்தன.  நாடு முழுவதும் இதுவரை 189 கோடி டோஸ்களுக்கும் அதிகமாக தடுப்புசி செலுத்தப்பட்டுள்ளது.

Corona

அந்தவகையில் தமிழகத்தைப் பொறுத்தவரை ஞாயிற்றுக் கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.  இருந்தபோதிலும் தமிழ்நாட்டில்  தற்போது வரை 1.50 கோடி பேர் 2வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல்  உள்ளனர்.  இதனால் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக  சுகாதாரத்துறையின்ர் அச்சம் தெரிவிக்கின்றனர்.   ஆகையால் மீண்டும் தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.  அதன்படி வருகிற 8 ஆம் தேதி  ( நாளை மறுநாள் ) தமிழகத்தில் சூப்பர் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.  

கொரோனா தடுப்பூசி

இந்த தடுப்பூசி முகாமில் 2வது தவணை தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   அத்துடன் கிராம வாரியாக தடுப்பூசி போடாதவர்களின் பட்டியல்  தயாரிக்கப்பட்டு   சுகாதாரத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.  அதில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களின் பெயர்,  கைபேசி எண், தடுப்பூசியின் பெயர், முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திய நாள், 2வது டோஸ் செலுத்த வேண்டிய நாள், தடுப்பூசி செலுத்தி எத்தனை நாள் ஆகியுள்ளன போன்ற விவரங்கள் இடம்பெற்றிருக்கின்றன.  இந்த விவரங்களைக் கொண்டு தேவைகேற்ப கிராம வாரியாக ஒன்றுக்கும் மேற்பட்ட தடுப்பூசி முகாம்கள் கூட அமைக்கப்படும் என்று பொது சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.