கட்டுக்கடங்காத கூட்டம்... இன்னும் சற்று நேரத்தில் தவெக தலைவர் விஜய் பரப்புரை..!
இதையடுத்து நாகையில் புத்தூர் ரவுண்டானா பகுதியில் இன்று பரப்புரை மேற்கொள்ள விஜய் திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் பாதுகாப்புக் காரணங்களை கூறி அவ்விடத்தில் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. அதற்குப் பதிலாக அண்ணா சிலை பகுதியில் பரப்புரை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து, திருவாரூரிலும் தவெக தலைவர் விஜய் இன்று பரப்புரை மேற்கொள்ளார். இதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளில் தவெகவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
தவெக தலைவர் விஜய் இன்னும் சற்று நேரத்தில் புத்தூர் அண்ணா சிலை அருகே பிரச்சாரம் செய்ய உள்ள நிலையில், ஏராளமான தொண்டர்கள் புத்தூர் ரவுண்டானா பகுதியில் அவரை வரவேற்பதற்காக குவிந்துள்ளனர்.
நாகை மாவட்டத்தில் கிழக்குக் கடற்கரை சாலை வழியே அங்கிருந்து புத்தூர் அண்ணா சிலை பகுதியில் மக்களை சந்தித்து இன்னும் சற்று நேரத்தில் உரையாற்று உள்ளார் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்


