"பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநர் காலம் தாழ்த்தியது ஏற்க முடியாதது" - உச்சநீதிமன்றம் அதிருப்தி!!

 
arivu

பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநர் காலம் தாழ்த்தியது ஏற்க முடியாதது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள பேரறிவாளன் தன்னை விடுதலை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என்று அவரது தாயார் அற்புதம்மாள் கடந்த பல ஆண்டுகளாக சட்டப் போராட்டம் நடத்தி வரும் நிலையில் பேரறிவாளன் விடுதலை குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் கடந்த பல மாதங்களாக நடைபெற்று வருகிறது.

 Perarivalan

பேரறிவாளனை விடுதலை செய்யும் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மாநில அரசு முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியிருந்த நிலையில் பேரறிவாளன் விடுதலை குறித்த சட்ட தீர்மானத்தை நிறைவேற்றிய தமிழக அரசு அதை ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.  ஆனால் பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. அத்துடன் பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் குடியரசுத் தலைவர் தான் முடிவெடுக்க வேண்டும் என்று ஆளுநர் தரப்பில் கூறப்பட்டு இருந்தது. இந்த விவகாரத்தில் மத்திய  அரசு சார்பில் அவகாசம் கோரியது.  

supreme court
இந்நிலையில் பேரறிவாளன் விடுதலையில் முடிவெடுக்க ஆளுநர் காலம் தாழ்த்தியது ஏற்புடையதல்ல என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.  மாநில அரசின் தீர்மானத்தின் மீது ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம் மீண்டும் வழக்கை ஒத்திவைக்க மத்திய  அரசு கோரமுடியாது என்றும்  காட்டமாக கருத்து தெரிவித்துள்ளது . மத்திய  அரசு சார்பில் அவகாசம் கோரியதால் பேரறிவாளனை விடுவிக்க கோரும் வழக்கு ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.