கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வால்பாறையில் 13 செ.மீ. மழை பதிவு!

 
heavy rain

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வால்பாறையில் 13 செ.மீ. மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இன்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

Rain

இந்த நிலையில், தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வால்பாறையில் 13 செ.மீ. மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேனி மாவட்டம் வீரபாண்டி மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் தலா 11 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தேனி மாவட்டம் போடிநாயக்கனூர், செங்கோட்டை மற்றும் திருப்பூரில் தலா 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சேலம் மாவட்டம் தம்மம்பட்டிஜ், ஈரோடு மாவட்டம் எலந்தகுட்டைமேடு, ராமநாதபுரம், எடப்பாடி, குமாரபாளையத்தில் தலா 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.